Wednesday, November 4, 2009

பாட்டு (மட்டும் தமிழில்) பாட வா



A : 'This episode third round for thirty thousand. Readyயா இருக்கீங்களா?'

B : 'Yeah..lets go '

A : 'Almost உங்களுக்கு preparation time வேற..so I think u must have done some homework'

B : 'Brushed up some of songs. பார்ப்போம்.'

A : 'பார்க்கலாம். So can we have the third round? '

    3 ஆவது சுற்றுப் பாடல் தேர்வுகள் அவருக்குக் காட்டப்படுகிறது.

B : ' I've choice த்ரிஷாவா இல்ல P.B.? '

A : ' Why P.B.ஸ்ரீநிவாஸ்? Its a male play back singer இல்லையா I mean?'

B : 'Yeah..but ..mm..I just felt I know some of his best solos..I know because நிறைய கேட்ட பாடல்கள். His best I mean just scream of solos that is sung like காலங்களில் அவள் வசந்தம் or songs like that..'

A : ' நிலவே என்னிடம் நெருங்காதே'

B : 'Yeah..I know such songs. Just ஆனா ரெண்டு மூணுதான் தெரியும். Very apprehensive. But till இருக்கும்னு ஒரு நம்பிக்கை..I'll go for P.B ஸ்ரீநிவாஸ் hits'

    பாடகர் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய இரு பாடல்களின் ஆரம்ப வரிகள் திரையில் காட்டப்படுகின்றன. போட்டியாளர் அதிலொன்றைத் தெரிவுசெய்து, திரையில் கொடுக்கப்படும் அப் பாடலின் வரிகளைப் பார்த்துப் பாடவேண்டும். பாடலின் இடையில் ஆறு அல்லது ஏழு சொற்கள் இடைவெளியாக இருக்கும். அச் சொற்களை மறவாது சரியான இடத்திலிட்டு போட்டியாளர் பாடவேண்டும். ஒவ்வொரு பாடலுக்குமான பரிசுத்தொகை இந்திய ரூபாய்கள் பத்தாயிரத்திலிருந்து ஆரம்பித்து எட்டுப் பாடல்களின் முடிவோடு இந்திய ரூபாய்கள் ஐந்து இலட்சத்தை எட்டும்.

A : 'இந்த இரண்டு பாடல்கள்ல ரெண்டுமே the beautiful songs..the evergreen classics '

B : ' Yeah..so just..Yeah..its looks nice..ok..I think ..'

A : 'looks nice ?'

B : 'looks nice. its sounds good. aah நிலவே என்னிடம் நெருங்காதே would be a nice choice. ஏன்னா மௌனமே வார்த்தையாய் எனக்கு பாதிதான் தெரியும். I don't know அங்கிங்க scattered ஆ I know.But Im not sure. So I guess நிலவே என்னிடம் நெருங்காதே எனக்கு ஓரளவுக்கு நான் கேட்டிருக்கேன்.'

    கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காணக் கிடைத்த கண்கொள்ளாக் காட்சியிது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியா எனக் கேட்டுவிடாதீர்கள். சத்தியமாக இது தமிழ் பேசும் மக்களுக்கான விஜய் தொலைக்காட்சியின், பிரபலங்களைத் தமிழில் பேசவும், பாடவும் செய்வதற்காக நடத்தப்படும் 'பாட்டுப்பாட வா' நிகழ்ச்சியின் கடந்த வார அங்கம். மேற்சொன்ன அட்சர சுத்த ஆங்கில வார்த்தைகளை மொழிந்தவர்கள் இரு பிரபல பிண்ணனிப் பாடகிகள். சரி. இருவரும் வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டபவர்கள், தமிழில் பேசச் சிரமப்படுகிறார்களோ என நீங்கள் நினைத்தால், அது தவறு. இருவருமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மண்ணின் புதல்விகள் பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி மதுமிதா.


    இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஒவ்வொரு அங்கத்தினதும் ஆரம்பத்தில் அவர் சொல்வார். 'இப் போட்டி, நாம் அறிந்த பாடல்களின் அழகிய தமிழ் வரிகளை நினைவுபடுத்தச் செய்யும் போட்டி. நடிகர்கள், பாடகர்கள் என நாங்கள் எல்லோரும் அறிந்த பிரபலங்களின் தமிழறிவைச் சோதிக்கும் நிகழ்ச்சி'. ஆனால் உண்மையில் அவரும், போட்டியாளரும் சேர்ந்துகொண்டு  தமிழைச் சோதிக்கிறார்கள். எப்பொழுதாவது ஆங்கில உரையாடலிலிருந்து பாவமாக எட்டிப்பார்க்கிறது தமிழ். உதாரணத்துக்கு மேலே நான் சுட்டியிருக்கும் உரையாடலின் வரிகளைப் பார்க்கலாம். இதில் தமிழ் எங்கே வாழ்கிறது? இதுவே தொடர்ந்தால் தமிழ் எங்கே வாழப் போகிறது? இத்தனைக்கும் பரிசுத் தொகை ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்கள்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழ்ப்பாடகி, ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழை வாழ வைப்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளரும் கூட ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடத்துகிறார். எத்தனையோ வேற்றுமொழி நடிகர்கள், பாடகர்கள் தமிழ் திரையுலகுக்கு வந்து, நல்ல தமிழில், உச்சரிப்பிலும் கூட அட்சர சுத்தமாக பேசி, பாடி வரும்போது, தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் இப்படி தமிழைக் கொல்வது ஏற்கப்படக் கூடியதா? இதே நிகழ்ச்சியில் முன்பு போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட பாடகர்கள் சத்யன், பிரசன்னா, முகேஷ், நடிகை அபிராமி ஆகியோர் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல், தொகுப்பாளரை விடவும் அழகிய தமிழில்தான் உரையாடினார்கள். நடிகை அபிராமி, நடிகர் கமல்ஹாசனின் கதாநாயகியாக 'விருமாண்டி' உட்பட இன்னும் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கடந்த ஆறு ஆண்டுகாலமாக அமெரிக்காவில் கல்வி கற்பவர். ஆங்கிலச் சூழலில் இருந்துவிட்டு வந்த அவரே முழுக்க, முழுக்க தமிழில் பேசி, தமிழில் பாடி வெற்றிப்பணத்தோடு போனதைக் காண முடிந்தது. எனில், நமது ஒரு சில தமிழ் போட்டியாளர்கள் மட்டும் தமிழ் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்தைக் காவித் திரிவது ஏன் எனப் புரியவில்லை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் உரையாடிக் கொள்ளட்டும். தமிழுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியிலுமா இந்தளவு ஆங்கிலம்? இதில் போட்டியின் விதிமுறைகளைத் தெரிவித்த தொகுப்பாளரே ஆங்கிலத்தை விட முடியாமல் அவதிப்படுவதைப் பார்க்கும் போது 'என்ன கொடுமையிது' என்றே எண்ணத் தோன்றுகிறது.

    அதிலும் முத்தாய்ப்பாக பாடகி மதுமிதா, போட்டியிலிருந்து பாதியிலேயே விடைபெறும்போது தமிழுக்காகச் சொன்ன வார்த்தைகள் இவை.

அனுராதா ஸ்ரீராம் : 'Its I think its கொஞ்சம் difficult. So Its a brilliant. I mean very lucky today and also the commitment is there. நீங்க listல இருந்து எந்தப் பாடல்கள் பிடிக்கிறதோ அதையாவது நீங்க வந்து..you know.. ரசிச்சு, உள்வாங்கி, அந்த lyrics எல்லாம் இவ்ளோ தூரம் மனசுல வச்சிருக்கிறது I think ever young expiring playback singer..and we totally enjoyed your show..Congratulations..and Good luck உங்களுடைய future projects எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். புதுப்பாடல்கள் release ஆகப்போகுது. We will pray that will be the big hit '

மதுமிதா : 'நான் என்ன சொல்ல விரும்புறேன்னா, ஒரு ஒரு பாடலுக்கும் வரிகள் வந்து ஒரு backbone மாதிரி. So பாடுற எல்லோருமே வந்து நீங்க ஒரு show பாடினாலோ இல்ல try by hearting the lyrics..that only takes ten minuts.அதுவும் நம்மல்லாம் we are from tamilnadu.  நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'

அனுராதா ஸ்ரீராம் : ' Lovely..can we have lot of applauds for that. Thank you so much Madhu. Can we have the cheque please?'

    நடிகர் வடிவேலு பாணியில் 'முடியல' என்று சொல்லத் தோன்றுகிறதா? இது தான் தமிழ் நிகழ்ச்சி. தமிழை வாழ வைக்கப்போகும் சுத்தமான தமிழ் நிகழ்ச்சி.

    விஜய் தொலைக்காட்சி, தமிழுக்காகப் பல போட்டிகளை அறிமுகப்படுத்தி தமிழ் மொழியை வாழ வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அதனைப் பாராட்ட வேண்டும். சிறுவர், சிறுமிகளின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு', 'நீயா நானா?' போன்றவற்றில் அழகிய தமிழைக் கேட்க முடிகிறது. விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஒன்று செய்யலாம். இந்த 'பாட்டுப் பாட வா' நிகழ்ச்சியின் ஒரு வாரப் பரிசுத் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு,  நல்ல தமிழை மட்டுமே பேசி நிகழ்ச்சியைத் தொகுக்கக்கூடிய ஒரு தொகுப்பாளரைத் தேடிப்பிடியுங்கள். அல்லது இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகள் கூடாதென்று விதிமுறையைச் சொல்லிவிடுங்கள். தமிழ் வாழும். அது தானாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படிக் கொன்று விடாதீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி - உயிர்மை



66 comments:

ARV Loshan said...

சாட்டையடி ரிஷான்..
நான் கூட இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் விரும்பி விடாமல் பார்த்து வந்தேன்.. இப்போது போரடிக்கிறது..
அனுராதாவும் வெறுக்க செய்கிறார்.
தமிழில் பேசி,பாடக் கூடிய எத்தனை பாடக,பாடகியர் இருக்கிறார்கள்..


//விஜய் தொலைக்காட்சி, தமிழுக்காகப் பல போட்டிகளை அறிமுகப்படுத்தி தமிழ் மொழியை வாழ வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அதனைப் பாராட்ட வேண்டும். சிறுவர், சிறுமிகளின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு', 'நீயா நானா?' போன்றவற்றில் அழகிய தமிழைக் கேட்க முடிகிறது. விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஒன்று செய்யலாம். இந்த 'பாட்டுப் பாட வா' நிகழ்ச்சியின் ஒரு வாரப் பரிசுத் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு, நல்ல தமிழை மட்டுமே பேசி நிகழ்ச்சியைத் தொகுக்கக்கூடிய ஒரு தொகுப்பாளரைத் தேடிப்பிடியுங்கள். அல்லது இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகள் கூடாதென்று விதிமுறையைச் சொல்லிவிடுங்கள். தமிழ் வாழும். அது தானாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படிக் கொன்று விடாதீர்கள்.//
அருமை. & உண்மை

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எல்லோரும் வாசிக்கவேண்டிய கட்டுரை... கவலையாகவும் கடுப்பாகவும் இருக்கிறது

விஜி said...

ஒருமுறை எனக்கும் இதைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ரிஷான். உங்கள் கருத்தோடு/விமர்சனத்தோடு ஒத்துப்போகின்றேன்.

'தமிழ்" தமிழ் என்பது வெறும் வாய் வார்த்தைகளோடு நின்று போகின்றது என்பதே உண்மை. :(

ராஜா said...

உண்மைதான், இப்பெல்லாம் பாட்டும் எங்க சார் தமிழில் இருக்கு ?
பாதி ஆங்கிலம், பாதி புரியாத மொழி மீதி காட்டுவாசி சப்தங்கள்
வேணும்ன்னா இடை இடையே கொஞ்சம் தமிழ் வார்த்தைகள் அதுவும் குறிபிட்ட வட்டார வழக்குகள்.

முதலில் பாட்ட மாறிவிட்டு பிறகு பாடகரைத் திருத்தலாம் !

தமிழன் வேணு said...

லுக் ரிஷான்! இதெல்லாம் வெரி வெரி சிம்பிளான விஷயம். ஐ டோண்ட் நோ இந்த மேட்டரை ஏன் இவ்வளவு எக்ஸாஜரேட் பண்ணறீங்கன்னு! யூ ஸீ! ஐயம் ய ப்யூர் டமிலன்! ஸோ, ஏஸ் ய டமிலன், நான் என்ன பேசணும் எப்படிப் பேசணும்னு யாரும் டிக்டேட் பண்ண முடியாது யூ நோ! தட் இஸ் வெரி வெரி ராங்! பை த வே, டாமில்லே பேசினாத் தான் டமிலன்கிறதை என்னாலே அக்ஸப்ட் பண்ண முடியலே! ஐயாம் சாரி..பட்..என் மனசுக்குப் பட்டதை நான் எக்ஸ்ப்ரஸ் பண்ணிருக்கேன்! உங்களை இம்ப்ரஸ் பண்ணறதுக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க! டேக் இட் ஈஸி மேன்!

சுபாஷிணி said...

ரிஷான்,
கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் இந்த உரைழயாடல் முழுவதைம் தட்டச்சு செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழக தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வது? ஆங்கிலம் கலந்த தமிழ் தான் நடைமுறை என்ற நினைப்பு ஆழமாக பதிந்து விட்டதன் வெளிப்பாடு.. இல்லையா?

அன்புடன்
சுபா

ஆசிப் மீரான் said...

வெரிகுட் வெரிகுட்
ஈவன் ஐ டோண்டு க்னோ ஏன் இப்படி ரிஷான் ரைட் பண்ணான்னு புரியலை
மே பீ (சே! இது அது இல்ல), இப்படி எழுதுனா பாப்புலராகலாம்னு திங் பண்ணியிருப்பானோ?
லேங்க்வேஜ்ங்குறது ஒன்லி ஃபார் கம்யூனிகேசன் அவ்வளவுதான் அதுல என்ன லாஜிக்
பார்க்குராங்கன்னு தெரியலை.

ஜீவ்ஸ் said...

Common Dude. I hundred percent with Venu sir. ஸீ... யு கான்ட் கம் அன்ட் டிக்டேட் வாட் தெ நீட் டு ஸ்பீக். நீங்க என்ன பேஸ் ரீங்கன்னு தெரிஞ்சு தான் பேஸ் ரீங்களா? டாமில் பேஸனும்னு தானே எல்லாம் பேஸிட்டு இருக்கோம். வாட் ரப்பிஷ் ஆர் யூ டாக்கிங்க்... ஐ டோண்ட் ரிய்லி கெட் திஸ்

சிவசுப்ரமணியன் said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை

ராஜா said...

// லுக் ரிஷான்! இதெல்லாம் வெரி வெரி சிம்பிளான விஷயம். ஐ டோண்ட் நோ இந்த மேட்டரை ஏன் இவ்வளவு எக்ஸாஜரேட் பண்ணறீங்கன்னு! யூ ஸீ! ஐயம் ய ப்யூர் டமிலன்! ஸோ, ஏஸ் ய டமிலன், நான் என்ன பேசணும் எப்படிப் பேசணும்னு யாரும் டிக்டேட் பண்ண முடியாது யூ நோ! தட் இஸ் வெரி வெரி ராங்! பை த வே, டாமில்லே பேசினாத் தான் டமிலன்கிறதை என்னாலே அக்ஸப்ட் பண்ண முடியலே! ஐயாம் சாரி..பட்..என் மனசுக்குப் பட்டதை நான் எக்ஸ்ப்ரஸ் பண்ணிருக்கேன்! உங்களை இம்ப்ரஸ் பண்ணறதுக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க! டேக் இட் ஈஸி மேன்!//





வெரி பவர் புல் மெஸ்சேஜ் டு நண்பர் ரிஷான், ஐயம் கிளியர் செய்த டமிலன் வேணு சார் ஐயாம் கிளியர் நவ். வெரி வெரி நன்றி !

சுவாதி said...

ஐயோ!!

செல்வன் said...

அட கொடுமையே....அப்புசாமி சீதாப்பாட்டி தமிழா இல்லெ இருக்கு?:-)

சன், விஜய்,ராஜ்,கலைஞர் டிவியை எல்லாம் பார்ப்பதை நிறுத்துங்கப்பா.இதை பார்த்தால் பைத்தியம் பிடிப்பதுதான் மிச்சம்.நாள் முழுக்க அழுமூஞ்சி சீரியல்கள், விளம்பரத்துக்கு நடுவே திரைப்படம்.

சிலநாட்களுக்குமுந்தி நண்பர் வீட்டில் விஜய் தொலைகாட்சி ஓடியது.பிரபுதேவா ஏதோ ஒரு நடனபோட்டிக்கு தலைமை தாங்கினார்.அவர் ஏதோ கடவுள் மாதிரியும் ஆடவந்தவர்கள் அவரது கொத்தடிமை மாதிரியும் "மாஸ்டர், மாஸ்டர்.." என்று கூப்பிடுகொண்டு,அவரை நடனபுயல் அது இதுன்னு பில்டப் தந்து, அவர் நிற்கும் மேடையில் தானும் நிற்பதே பாக்கியம் என பங்கேற்பாளர்கள் கருதி....கொடுமையடா சாமி

இதில் பிரபுதேவாவை மாஸ்டர் என்றால் என்ன "எசமான்" என்றால் என்ன?இரண்டும் கொடுமைதான்

நரேஷ் குமார் said...

//இதில் பிரபுதேவாவை மாஸ்டர் என்றால் என்ன "எசமான்" என்றால் என்ன?இரண்டும் கொடுமைதான்//

கட்டின பொண்டாட்டியை வுட்டுட்டு வேற ஒருத்தி கூட சுத்தறவனுக்கெல்லாம் மரியாதை!!! என்ன கொடுமை சார் இது?

நா.கண்ணன் said...

சுபா:

இதில் இன்னொரு வேடிக்கையும் கண்டேன்.
இரண்டு வரிகளுக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆங்கிலமும், தமிழும் கலக்கும் போது தலைவலி வருகிறது.
ஆனால்,
இந்நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால், கேட்டிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது!

கையில் உள்ளதும் தோல் தான்.
நாக்கில் உள்ளதும் தோல் தான்.
ஆனால் காப்பியை துண்டு வைத்து பத்திரமாகத்தூக்கி வாயில் ஊற்றுக் கொள்வார் இராஜாஜி.

இது என்ன விந்தை?

புலவர்.அசோக் said...

நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒன்று கேபிள் டிவி. கேபிள் டிவியில் உள்ள ஒரு அற்புத ஆப்சன் என்னவென்றால், வேண்டாத நிகழ்ச்சியை நாம் பார்க்க வேண்டியதில்லை. அழுவாச்சி சீரியல்கள் ஏன் போடப்படுகின்றன? டிமாண்ட் மற்றும் சப்ளை தான். அவர்கள் எதனையும் திணிப்பதில்லை.

திட்டிக் கொண்டே ஏன் பார்க்கிறோம்? நமக்கு அதை விட வேறு நல்ல பொழுது போக்கு இல்லாததால் தானே? தமிழுக்கு இன்னும் அதிக அளவில் சேனல்கள் வர வேண்டும். அது அந்தக் குறையை நிவர்த்தி செய்யும்.

இன்னம்பூரான் said...

ரிஷான் அவர்களே.
இது டங்க்லீஷ்! இது ஒழிக்க,இதை ஒலிப்பதிவு செய்து செல்லுமிடங்களெல்லாம் போட்டுக்காட்டுங்கள். சுபாஷிணியும், கண்ணனும் சொல்வது சரியே.

சாந்தி said...

ஐ திங்க் இதுதான் தமிழ்நாட்டு பேஷன் , கல்ச்சர் னு..


டோண்ட் ஒர்ரி...வி ஆர் முன்னேறிபையிங்..:)

குமார் said...

அன்பின் ரிஷான்,

இதே எண்ணங்கள் என் மனதிலும் அலை பாய்வதுண்டு.

இதே போல உடை அலங்காரங்கள், முக அலங்காரங்கள் ஆகியவற்றிலும் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்.

தலையெழுத்து யாரை விட்டது.?

இதெல்லாம் இயக்குனர் சொல்படி செய்கிறார்கள் என்னும் கூற்றில் எனக்கு சம்மதம் இல்லை. அவர்களுக்கே தமிழிலேயே பேச வேண்டும் என்று தீர்மானமான எண்ணம் இருந்தால் கட்டாயம் பேச முடியும்.

நாம் ஒன்றுதான் செய்யலாம்.

இது போன்ற நிகழ்ச்சிகளைக் காணும் போது தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு ஏதேனும் உபயோகமான காரியம் செய்யலாம்.

அன்புடன்,
குமார்(சிங்கை)

புலவர்.அசோக் said...

// ஐ திங்க் இதுதான் தமிழ்நாட்டு பேஷன் , கல்ச்சர் னு..

டோண்ட் ஒர்ரி...வி ஆர் முன்னேறிபையிங்..:)//


தமிழ்நாட்டு மக்கள் அறிவானவர்கள் என்பதில் நம்பிக்கை இருந்தால் அவர்களை அவர்கள் தம் விருப்பப்படி வாழ விடுவதே சரி. பெரும்பான்மை மக்களின் அறிவை அவமதிப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருப்பதில்லை.

சாந்தி said...

//தமிழ்நாட்டு மக்கள் அறிவானவர்கள் என்பதில் நம்பிக்கை இருந்தால் அவர்களை அவர்கள் தம் விருப்பப்படி வாழ விடுவதே சரி. பெரும்பான்மை மக்களின் அறிவை அவமதிப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருப்பதில்லை.//



தெளிவா சொல்லுங்க .. தமிழ் தொலைக்காட்சியில் தமிங்கலத்தில், ஆங்கிலத்தில் பேசலாமா கூடாதா?

இல்லை அதற்கு மாற்று வழி?

இதுக்கும் அறிவுக்கும் , அவமதிப்புக்கும் என்னங்க சம்பந்தம்?..

நமக்கு ஆங்கிலம் தெரியும் சரி.. ஆங்கிலம் தெரியாத புரியாத தமிழ்நாட்டு மக்களும் அந்நிகழ்ச்சிகளை பார்க்கலாமா கூடாதா?

தேவையான இடத்தில் ஆங்கிலம் பேசுவது வேறு ..

சில மருத்துவர்கள் கூட சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பின் தமிழிலும் அதற்கான விளக்கத்தை அழகாக தருகின்றனர்..

அவர்கள் அறிவாளி இல்லையா?..அவமதிக்கப்படுகிறதா அவர்கள் அறிவு..?

ஷைலஜா said...

இதெல்லாம் கண்டு பலமுறை நான் வருந்தியிருக்கிறேன்... சின்னத்திரைல மட்டுமா பொதுவா வீட்டு வைபவங்களில் பேசும்போதுகூட தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசுவதையே மதிப்பாக கருதும் அவலத்தை என்ன சொல்வது?

என் குழந்தைக்கு தமிழ் பேசமட்டுமே தெரியும் எழுதப்படிக்க வராது என்று சில தமிழ்பெற்றோர்கள் பெருமைபட சொல்லும்போது அவர்களிடம் என்ன சொல்வது?. ஆர்வம் இருந்தும்வேறுவழி இல்லை என வருத்தமாய் சொன்னாலாவது போகிறது என சேர்த்துக்கொள்ளலாம் ஆனாலும் வீட்டிலேயே அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் வராமலாபோகும் ? பச்சைமண்ணை விருப்பம்போல குழைத்து வடிவம் செய்துவிடலாம் தக்கபொறுமையும் ஆர்வமும் பெற்றோர்களுக்குஇருந்தால்! ஐந்தில் விளையாதது ஐம்பதிலா விளையும்?
என் மகன் மகள் ப்ஃரெஞ்ச் படிக்கிறான் ஜெர்மன்படிக்கிறான் என சொல்லிக்கொள்வதையே பலர் விரும்புகின்றனர் ஆனாலும் அயல்நாட்டில் தமிழை வளர்க்க பல நல் உள்ளங்கள் பாடுபடுவதை நேரிலேயே நான் பார்த்தேன்.

எண்ணரிய ஆண்டுகளில் வந்துதித்த மொழிகள்- அவை
எத்தனைதான் ஆயினும் அத்தனையும் விழிகள்!
மண்ணுலகில் குறையேதும் இருந்திடாமல் நிலைத்து- இன்றும்
மாண்புடனே இயங்கிவரும் தமிழ் மொழியே சிறப்பு!

இருளான மனத்தினையும் ஒளியாக்கும் குறள் நெறி- என்றும்
இன்னலுறும் நெஞ்சுக்கும் மகிழ்வுதரும் அற நெறி
அருளாளர் கமபரெனும் ஆழ்வாரின் காவியம்- புவி
அரசாளமறுத்திருந்த இளங்கோவின் காப்பியம்!

செருக்கறுத்துச் செம்மாந்த பக்தி தரும் திருமுறை -பெரும்
சீர்மிகுந்து வளமார்ந்த வாழ்வுக்கே வழிமுறை!
பெருமைமிகு திருவிளையாடற்புராணமும் அற்புதம்- பெரிய
புராணமுடன் அரிய கந்தபுராணமும்தான் உன்னதம்!


சுந்தரனார் பாரதியார் தாசனார்போல் பன்னூறு-அறிஞர்
சுவைத்தளித்த இயலிசையும் நாடகமும் தேனாறு!
சிந்தையுடன் தாய் தந்தையும் மகிழ்ந்திருந்த உயிர்மொழி- உயர்
சைவமண வைணவமும் சார்ந்திருக்கும் அருள்மொழி!

செந்தமிழின் சொற்களிலே படிப்பதெல்லாம் பரவசம்!- அறிவுச்
செழுமையெனப் படைத்திடுவோர் ஞானமெல்லாம் நவரசம்!
அந்தமிலா மொழியதனில் உரைப்பதெல்லாம் அமிழ்தமே-இதய
இன்பத்து நிலைதரலால் இறைமையாகும் தமிழே!

ஷங்கர் குமார் said...

திரு.ரிஷானின் கருத்துகளோடு அப்படியே ஒத்துப் போகிறேன். தயவுசெய்து, சென்னையில் இருக்கும் திருவாளர்கள். நரேஷ், வில்லன், எஸ் கே. நடரஜன் போன்ற நல்லவர்கள் இதை ஒரு பிரதி எடுத்து, நேரில் கொடுத்து வந்தால் நலமாக இருக்கும். பாடகி திருமதி. அனுராதா வீட்டுக்கும் அனுப்பிவையுங்கள். புண்ணியமாப் போகும்!

சித்ராம்மா கூட அழகு தமிழில் ஒரு நிகழ்ச்சியில் பேச இதே தொலைக்காட்சியில் முயன்று வருகையில், இவர்களுக்கென்ன கேடு!
வெட்கக்கேடு!

வினோத் ராஜன் said...

டி.வி சானலோட புரோகிராமிங்க் கன்டென்ட் ஆடியன்ஸை பொறுத்து.

இஷ்டமிருக்கிறவங்க.. புரியறவங்க.. பார்க்கப்போறாங்க்..

புரியலைன்னு நினைக்கறவங்க மத்தவங்க வேற சானலை மாத்தப்போறாங்க..

இதுல உங்களுக்கென்ன நஷ்டம் ? சானலுக்குத்தான் என்ன கஷ்டம் ?

ஏன், இந்த வீண் வெட்டி புலம்பல் ?

பிடிக்கலைன்னா விஜய் டி.வியை ஒட்டுமொத்தமா பிளாக் பண்ணிட வேண்டியது
தானே :-/

ரிமோட்டுன்னு ஒன்னும் கைல இருக்கும், பிடிக்காதத ஏன் பார்க்கணும். இப்படி
பார்த்து, அதுவும் இத்தனை எல்லா டயலாக்கையும் கஷ்டப்பட்டு டைப் அடிச்சு,
அதுக்கு விளம்பரம் வேற கொடுத்து, அதுக்கு ஒரு பதிவு போட்டு ஏன் புலம்பி
தீர்க்கணும் ?

சாந்தி said...

//டி.வி சானலோட புரோகிராமிங்க் கன்டென்ட் ஆடியன்ஸை பொறுத்து.

இஷ்டமிருக்கிறவங்க.. புரியறவங்க.. பார்க்கப்போறாங்க்..

புரியலைன்னு நினைக்கறவங்க மத்தவங்க வேற சானலை மாத்தப்போறாங்க..

இதுல உங்களுக்கென்ன நஷ்டம் ? சானலுக்குத்தான் என்ன கஷ்டம் ?

ஏன், இந்த வீண் வெட்டி புலம்பல் ?

பிடிக்கலைன்னா விஜய் டி.வியை ஒட்டுமொத்தமா பிளாக் பண்ணிட வேண்டியது
தானே :-/

ரிமோட்டுன்னு ஒன்னும் கைல இருக்கும், பிடிக்காதத ஏன் பார்க்கணும். இப்படி
பார்த்து, அதுவும் இத்தனை எல்லா டயலாக்கையும் கஷ்டப்பட்டு டைப் அடிச்சு,
அதுக்கு விளம்பரம் வேற கொடுத்து, அதுக்கு ஒரு பதிவு போட்டு ஏன் புலம்பி
தீர்க்கணும் ?//

அதுசரி.. எல்லா அறிவு ஜீவிகளும் வெளிநாட்டு கலாச்சாரத்தை/ஆங்கிலத்தை ஒரு பொதுசனம் பாக்கும் தொலைக்காட்சியில் புகுத்துங்க.. நாங்க பாவப்பட்ட ஏழை சனங்க ஒவ்வொரு சேனலையா மாத்திட்டு கட்சீல ஒண்ணும் பாக்காம இருந்துக்கணும் ..நல்லதுங்கய்யா...வளருங்கோ...வாழுங்கோ..:)

-------------இப்படிக்கு தமிழ் மட்டுமே தெரிந்தவர்..

வினோத் ராஜன் said...

அது வியாபார தொலைக்காட்சி..

எது விக்குமோ அது தான் அவன் விற்கிறான்..

அவன் ஏதும், பொது ஜன சேவை நடத்த சேனல் நடத்தலயே.

மக்களிடம் ஆதரவில்லை என்றால், அவனோட டார்கட் ஆடியன்ஸுக்கு பிடிக்கலைன்னா,
வேற மாதிரி புரோக்ராம் கொண்டுவரப்போறான்..

இங்க நடக்குறது "ஓவரா சீன் போடுறது"...

வேறொன்னும் நான் சொல்றதிக்கில்ல

நரேஷ் குமார் said...

//டி.வி சானலோட புரோகிராமிங்க் கன்டென்ட் ஆடியன்ஸை பொறுத்து.


இஷ்டமிருக்கிறவங்க.. புரியறவங்க.. பார்க்கப்போறாங்க்..

புரியலைன்னு நினைக்கறவங்க மத்தவங்க வேற சானலை மாத்தப்போறாங்க..

இதுல உங்களுக்கென்ன நஷ்டம் ? சானலுக்குத்தான் என்ன கஷ்டம் ?

ஏன், இந்த வீண் வெட்டி புலம்பல் ?

பிடிக்கலைன்னா விஜய் டி.வியை ஒட்டுமொத்தமா பிளாக் பண்ணிட வேண்டியது
தானே :-/

ரிமோட்டுன்னு ஒன்னும் கைல இருக்கும், பிடிக்காதத ஏன் பார்க்கணும். இப்படி
பார்த்து, அதுவும் இத்தனை எல்லா டயலாக்கையும் கஷ்டப்பட்டு டைப் அடிச்சு,
அதுக்கு விளம்பரம் வேற கொடுத்து, அதுக்கு ஒரு பதிவு போட்டு ஏன் புலம்பி
தீர்க்கணும் ?//

பெரும்பாலான பதிவுகளால் உடனடித் தீர்வோ, மாற்ற மோ வருவதில்லைதான்....

குழுமத்தில் பேசிக் கொள்வதாலும் ஒன்றும் நடப்பதில்லை நேர விரயத்தைத் தவிர்த்து....

மேல சொன்ன இஷ்டமிருக்கறவங்க பாக்கிறது, ஆடியன்சைப் பொறுத்தது இதெல்லாமே சினிமாவின் காட்சியமைப்புகளிலிருந்து, பத்திரிக்கைச் செய்திகள் வரை பலவற்றுக்கும் சொல்வதுதான்....

புரியுது, புரியலைன்னு ஒற்றைத் தன்மையில் மட்டும் இந்தப் பதிவை அணுகினால், ஒரு மண்ணும் பண்ணுவதிற்கில்லை...இந்த பதிலையே எல்லா விஷயத்துக்கும் சொல்லிகிட்டு போகலாம்.....

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

அப்துல் ஜப்பார் said...

இது ஒண்ணும் வெட்டிப் புலம்பல் அல்ல. பிடிக்கல்லினா ஒதுங்கிடுங்களேன்
வெட்டியிலும் வெட்டிப் புலம்பல்.

சென்னையில் எல்லா மொழியினரும் இருக்கிறார்கள். அவர்களும் பார்க்க
வச்தியாக... என்பது ஆதாரமற்ற கூற்று. ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்ட
போது அந்தந்த மொழியினர் அந்தந்த மொழி அலைவரிசைகளைத்தான் பார்க்கிறார்கள் என்ற உண்மை வெளியானது.

ஒருமுறை பொதிகை இயக்குநரிடம் வர்ணனையை ஹிந்தியிலும்
ஆங்கிலத்திலும் ஒள்பரப்புகிறீர்கள் சரி. ஆனால் கடைசி ஐந்து நிமிடம்
வெறுமனே விவரப் பட்டியலை மாத்திரம் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே,
அந்த நேரத்தையாவது தமிழில் ஒரு சுருக்கமான தொகுப்புரையை வழங்க
அனுமதிக்கலாமே என்று கேட்டேன்.

அதற்கவர், “நாங்கள் நடத்திய ஓர் ஆய்வில், மக்கள் தொலைக்காட்சியை
ஆட்டத்தைப் பார்க்க மட்டும் பயன் படுத்திக் கொண்டு வர்ணனையை
வானொலியில் தமிழில்தான் கேட்கிறார்கள். ஆகவே இப்போதுள்ள
ஏற்பாட்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை” என்றார்..

ஆங்கிலம் அவசியத்திலும் அவசியம்தான். ஆனால் எல்லாமே அது என்பது
பேதமை. தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசி அதைக் கொச்சைப்
படுத்துவது மட்டுமல்ல, இப்படிச் செய்யும் போது ஆங்கிலத்தோடு
தமிழைக் கலந்து பேசி அந்த மொழியைக் கேவலப் படுத்துவதாகவும்
கூடக் கொள்ளலாமே..!

சாத்.அப்.ஜப்

செல்வன் said...

//புரியவில்லை.....

ஆக ஒரு நிகழ்ச்சி இப்படி இருக்கிறதே என்று ஆதங்கப் படுவது அல்லது கோபப்படுவது தவறா, சுதந்திரத்தில் தலையிடுவதா??? (நீங்கள் இந்த நிகழ்ச்சி சரி என்கிறீர்களா இல்லை தவறு என்கிறீர்களா என்றே எனக்கு புரியவில்லை...)//



இதில் சரி/தவறு சொல்ல எதுவுமே இல்லை.

எனக்கு புரிந்தது/புரியலை அல்லது பிடித்தது/பிடிக்கலை என்றுதான் சொல்லமுடியும்.

புலவர்.அசோக் said...

// இதில் சரி/தவறு சொல்ல எதுவுமே இல்லை.

எனக்கு புரிந்தது/புரியலை அல்லது பிடித்தது/பிடிக்கலை என்றுதான் சொல்லமுடியும்.//


அதே.

யாரும் நிகழ்ச்சியினை வலுக்கட்டாயமாக பார்க்க வைக்கவில்லை. "எனக்கு பிடித்தது"/"எனக்கு பிடிக்கலை" என்று சொல்லுவதே சரி. வேண்டாம் என்றால் பார்க்காதீர்கள்.

நரேஷ் குமார் said...

//யாரும் நிகழ்ச்சியினை வலுக்கட்டாயமாக பார்க்க வைக்கவில்லை. "எனக்கு பிடித்தது"/"எனக்கு பிடிக்கலை" என்று சொல்லுவதே சரி. வேண்டாம் என்றால் பார்க்காதீர்கள்//

நல்லதுங்க....

இங்கேயும் அந்த நிகழ்ச்சியை பிடிக்கவில்லை என்று கோபப்படத்தான் செய்வார்கள்.....பிடித்தல் நீங்களும் அதையே பேசுங்கள்....பிடிக்காட்டா இந்த இழையில் நுழையாதீர்கள்......(நுழையாதீர்கள் என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை....முழுக்க வாதத்திற்காக மட்டுமே சொல்கிறேன்...)

செல்வன் said...

//யாரும் நிகழ்ச்சியினை வலுக்கட்டாயமாக பார்க்க வைக்கவில்லை. "எனக்கு பிடித்தது"/"எனக்கு பிடிக்கலை" என்று சொல்லுவதே சரி. வேண்டாம் என்றால் பார்க்காதீர்கள்//

நல்லதுங்க....

இங்கேயும் அந்த நிகழ்ச்சியை பிடிக்கவில்லை என்று கோபப்படத்தான் செய்வார்கள்.....பிடித்தல் நீங்களும் அதையே பேசுங்கள்....பிடிக்காட்டா இந்த இழையில் நுழையாதீர்கள்......(நுழையாதீர்கள் என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை....முழுக்க வாதத்திற்காக மட்டுமே சொல்கிறேன்...)//



நிகழ்ச்சி புரியலை/பிடிக்கலைன்னு வாடிக்கையாளரா/ரசிகரா புகார் சொல்வது வேறு.

"தமிழச்சியா தமிழ் மண்ணில் பிறந்துட்டு ஆங்கில கலப்பை செய்வதா? தமிழ் இனி எப்படி வாழும்?"என கொதிப்பது வேறு விஷயம்

நரேஷ் குமார் said...

செல்வன்,

என்னைப் பொறுத்த வரையில் அந்த நிகழ்ச்சியை இன்னும் நல்ல தமிழல் எடுத்திருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை....அதற்கான காரணங்களும், இது தமிழ் சேனல், தமிழ் மக்களை நோக்கி எடுக்க பட்டிருக்கிறது....ஆக தேவையில்லாமல், ஒரு பொது ஊடகத்தில் இப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.....

தொலை நோக்குப் பார்வையில் எல்லா ஊடகங்களிலும், எல்லா நிகழ்ச்சிகளும் இதே மாதிரி இருந்தால் அது கண்டிப்பாக வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்....

இதற்கு யார் யார் எப்படி எதிர்ப்பு தெரிவித்தர்கள் என்பது தெரியாது... ஆனால் ஒருவர் கொதித்தார் என்பதற்காக அந்த நிகழ்ச்சியின் அடிப்படையோ, அதன் அனர்த்தங்களோ மாறிவிடாது.....

இதில் தனி மனித உரிமை எல்லாம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை...இதுதான் நடைமுறை என்று ஆதங்கப்படுவது வேறு...இதுதான் சரி என்று பேசுவது வேறு...இங்கு இந்தப் பதிவே தேவையில்லை என்று சொல்லப் பட்டதன் பிண்ணனியில், இதுதான் சரி என்ற அர்த்தம் ஒளிந்திருப்பதாகத்தான் எனக்கு பட்டது......


--
நரேஷ்
www.nareshin.wordpress.com

செல்வன் said...

நரேஷ்,

இப்படியே போனால் நாளை தமிழ் குழுக்களில் தமிழ் மக்களுக்கு எழுதப்படும் மடல்களில் ஆங்கில வார்த்தைகள் ஏன் என இன்னொருவர் கொதிக்கலாம்.தமிழ் மக்களுக்கு எழுதப்படும் தமிழ் நாவல்களில் ரோடு, கார்,பஸ் போன்ற வார்த்தைகள் ஏன்?அழகு தமிழில் பேருந்து, மகிழுந்து என எழுதலாம் என இன்னொருவர் கொடிபிடிக்கலாம்.

கடைசியில் யாரும் அவரவர் விருப்பப்படி பேச முடியாது, எழுதமுடியாது.பேச்சு சுதந்திரம் மொழிகாவலரின் சென்சாருக்கு கட்டுபட்டதாகிவிடும்.

கன்னட சட்டசபையில் மராத்தியில் உறுதிமொழி எடுத்த உறுப்பினரை பதவிநீக்கம் செய்திருக்கிறார்கள்.மராட்டியத்தில் இந்தியில் உறுதிமொழி எடுக்கிறேன் என்ற சமாஜ்வாதி கட்சி உறுப்பினரை ராஜ்தாக்ரே "உபிக்கு ஓடு" என மிரட்டி கொண்டிருக்கிறார்.மொழி அரசியலை தூண்டி குளிர்காய்வது எளிது.தீயை அணைப்பது கடினம்.




--
செல்வன்

www.holyox.tk

நரேஷ் குமார் said...

ஒன்று புரிகிறது....

இந்த விஷயமோ, விவாதமோ இதன் பெயரில் ஆனால் வேறு காரணங்களுக்காக அல்லது விஷயத்திற்காக நடைபெறுகிறது.... முற்றுப் பெறாத முன்பொரு சம்பவத்தின் அல்லது விவாதத்தின் நீட்சியாகப் படுகிறது....சில விஷயங்கள் எனக்கு புரியவேயில்லை

உரிமையைப் பற்றி பேசுகிற அளவு தார்மீகக் கடமைகளில் நாம் கவனம் செலுத்துவதில்லை.....

அப்படி கோபப்படுவது தவறென்றால் அதை எதிர்க்கலாம், மாறாக ஒட்டு மொத்தமாக இந்த பதிவு வீண், வெட்டி வேலை என்பது போன்ற வாதங்களால் என்ன பயன்??? அவசியம் என்ன?

நீங்கள் சொன்ன அந்த கன்னட, மராட்டிய மாநில நிகழ்ச்சிகள் அளவு நம் மாநிலம் மோசமாகிவிட வில்லை என்றுதான் பலமுறை எனக்கும் தோன்றியிருக்கிறது...கண்டிப்பாக அது தவறுதான்...அதற்காக நம் தொல்லைக்காட்சிகளின் அழிச்சாட்டியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது....

என்னுடைய கேள்வியே, இந்த நிகழ்ச்சியை குறை சொன்னதில் தனி மனித சுதந்திரம் எங்கு வந்தது??? செய்யக் கூடிய ஒரு விஷயத்தை செயய மாட்டேன் என்கிறார்களே என்று ஆதங்கப் படும் போதும் கூட, இது தேவையில்லாத விஷயம் எனும் போது என்ன சொல்வது...........


--
நரேஷ்
www.nareshin.wordpress.com

செல்வன் said...

நாம் பயன்படுத்தாத உரிமைகளை நாம் நாள்போக்கில் இழந்துவிடுவோம்.

உரிமை என்பது நிபந்தனைகுட்பட்டது கிடையாது. உன் கடமையை செய்தால் தான் உரிமை என்று சொல்ல முடியாது.உரிமை என்பது நிபந்தனைகப்பாற்பட்டது.

"இந்த பதிவை எதிர்ப்பது" என்பது "அனுராதா ஸ்ரிராமை" எதிர்ப்பது மாதிரியான தவறே.

இந்த நிகழ்ச்சியை குறைகூறீயதில் எந்த தவறுமில்லை.நானும் தான் ஒட்டுமொத்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் "அது பிடிக்கலை" என்ற காரணத்துக்காக புறக்கணிக்க சொன்னேன்.ஆனால் முன்பே சொன்னமாதிரி ரசிகனாக/வாடிக்கையாளராக ஒரு நிகழ்ச்சியை குறைகூறுவது வேறு."தமிழச்சியா தமிழ் மண்ணில் பிறந்துட்டு ஆங்கில கலப்பை செய்வதா? தமிழ் இனி எப்படி வாழும்?"என கொதிப்பது வேறு விஷயம்.முன்னது ரசிகரின் உரிமை.பின்னதை செய்தால் அதற்கு எல்லையே இல்லை.தமிழனா தமிழ் மண்ணில் பிறந்துட்டு ஆங்கில வழி கல்வியில் படிப்பதா என்பது மாதிரி என்னவேண்டுமானாலும் சொல்லலாம்.


"...இருவருமே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மண்ணின் புதல்விகள் பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் பாடகி மதுமிதா. .."

"..தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தமிழ்ப்பாடகி, ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழை வாழ வைப்பதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் இந்தளவுக்கு ஆங்கில வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்...."

சஹாரா தென்றல் said...

அண்ணா,
இந்த மாதிரி நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து உங்க நேரத்தை ஏன்
வீணாக்கிக்கறீங்க? நாம என்னதான் கரடியா கத்தினாலும் அவங்க காதுல விழாது.
ஏன்னா அவங்க வியாபாரிங்க. அப்படித்தான் இருப்பாங்க. அவங்களுக்கு
கல்லாப்பொட்டி முக்கியம். இப்போ பண்பலைகளும் இந்த மாதிரி மாறிட்டு வருது.
என்னத்த சொல்ல.. :(( [அப்போ செய்யற தொழில்ல நியாயம் தர்மம் எல்லாம்
வேண்டாமான்னு யாராச்சும் கேட்டுறாதீங்க..]

இந்த மாதிரி இம்சைக்குத் தான் அந்தப்பொட்டி முன்னால உட்கார்றதே இல்ல.

butterfly Surya said...

கண்ராவி... அனுராதா பேச்சு கடுப்பு...

பென்னேஸ்வரன் said...

மொழியின் மீது உண்மையான அக்கறையும் மரியாதையும் கொண்ட பதிவு இது.

திராவிட மொழி வீரர்கள் நடத்தும் ஊடகங்களில் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் தொலைக்காட்சியிலும் என்ன வாழ்ந்தது?

பேச்சுக்கு ஒன்று காசுக்கு ஒன்றுதானே தமிழனின் நடைமுறை வாழ்க்கை?

யோகியார் said...

நம் தமிழர் அனைவரின் சார்பாகவும்,உங்கள் தார்மீகக் கோபத்தை என்றும் யான் வரவேற்கிறேன் தோழரே!வாழ்க உம் பணி!

ரெ.கார்த்தி said...

ரிஷான்,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலைப்பொருள்களாகவும் கலாசாரப் பொருள்களாகவும் இருந்த
நிலை மாறி வர்த்தகப் பொருள்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டன. ஆகவே அதனை
அப்படித்தான் நீங்கள் பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் வெற்றி தோல்வி என்பது
உங்களைப் போன்ற கலாசார அக்கறையாளர்களின் கருத்தை விட மொத்ததில் எத்தனை மக்கள்
பார்த்தார்கள் (என்ன ரேட்டிங்) என்பதைப் பொறுத்தே அமையும்.

இந்த நிகழ்ச்சிக்கு ரேட்டிங் நல்ல முறையில் இருக்கிறது என்றே நான் யூகிக்கிறேன்.
அப்படி இல்லையானால் இந்நேரம் இதனைத் தூக்கிவிட்டு வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.
ஆகவே உங்கள் கோபம் இங்கு செல்லுபடியாகாது.

இந்த சந்தைப்படுத்துதல் முறையில் ஒரு கலாசார/சமுதாய அக்கறை கருதிய மேலாண்மை
இருக்க வேண்டும். சாதாரண வியாபாரப் பொருள்களுக்குக் கூட (சோப், சமையலெண்ணெய்)
தரக் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தொலைக்காட்சியிலும் வானொலியிலும்
தரக் கட்டுப்பாடு என்பது முற்றாக இல்லாமல் போய்விட்டது என்றே தோன்றுகிறது. ஒரு
Broadcasting Monitoring Authority இருப்பதை தமிழ்நாட்டு அரசாங்கம்தான் உறுதி செய்ய வேண்டும்.

இப்படிச் சொல்லும்போது எங்கள் நாட்டில் கூட மொழி பற்றி இருந்த தரக் கட்டுப்பாடுகள்
(தேசிய மொழியான மலாய் உட்பட) இந்த நேயர்கள் என்ணிக்கை பெருக்கும் வேட்டைக்குப்
முன் தோற்றுப் போய்விட்டதைக் காணுகின்றேன்.

ஆனால் ஒரு மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் தேர்வுகள் (choices) இருக்கின்றன.
நீங்கள் உங்கள் விருப்பப் பாடல்களுக்கு தொலைக்காட்சியைச் சார்ந்திராமல்
ஒரு ஸ்டீரியோ செட் வாங்கி வைத்துக் கொண்டு குறுந்தட்டுகள் வாங்கி (இவை
இப்போது மானாவாரியாகக் கிடைக்கின்றன; சந்தைப் படுத்துதலின் ஒரு நன்மை இது)
கேட்டுக் கொள்ளுங்கள். உங்களைத் தடுப்பாரில்லை. நான் அப்படித்தான் செய்கிறேன்.
நான் மனத்தளவில் இது பற்றி எரிச்சல் அடைவதை இது குறைத்திருக்கிறது.

M.Rishan Shareef said...

அன்பின் லோஷன்,

//சாட்டையடி ரிஷான்..
நான் கூட இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் விரும்பி விடாமல் பார்த்து வந்தேன்.. இப்போது போரடிக்கிறது..
அனுராதாவும் வெறுக்க செய்கிறார்.
தமிழில் பேசி,பாடக் கூடிய எத்தனை பாடக,பாடகியர் இருக்கிறார்கள்..//

நிச்சயமாக இப்பொழுது அலுப்புத்தட்ட வைக்கிறதுதான். அனுராதாவின் அதிகப்படியான அலட்டலும் காரணமாக இருக்கிறது. திரையில் காட்டப்படும் பாடல் வரிகளில் கூட கணிசமான எழுத்துப்பிழைகள் வேறு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மதுவதனன் மௌ,

//எல்லோரும் வாசிக்கவேண்டிய கட்டுரை... கவலையாகவும் கடுப்பாகவும் இருக்கிறது//

:(
சம்பந்தப்பட்டவர்களுக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சூர்யா,

//கண்ராவி... அனுராதா பேச்சு கடுப்பு...//

ஆமாம். மிக அதிகமான அலட்டல். போட்டியாளர்களைச் சிந்திக்கக் கூட விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். அத்தோடு குழப்பிவிடுகிறார். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

இவ் இழையில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பு நன்றிகள் !

எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லையெனில் வேறு சானலுக்கு மாற்றி வேறு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாமே என்றும் இப்படி ஒரு விமர்சனம் எழுதிவிடுவதால் மட்டும் ஆகப் போவதென்ன என்றும் இன்னும் பலவாறும் இங்கு கேள்விகள் எழும்பியிருக்கின்றன.

நான் தொலைக்காட்சி, திரைப்படங்களுக்கு நேரம் விரயம் செய்வது குறைவு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க விரும்புகிறேனெனில், அவை நிச்சயமாகப் பாடல் சம்பந்தமானதாக இருக்கும் அல்லது கார்ட்டூனாக இருக்கும்.


//இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஒவ்வொரு அங்கத்தினதும் ஆரம்பத்தில் அவர் சொல்வார். 'இப் போட்டி, நாம் அறிந்த பாடல்களின் அழகிய தமிழ் வரிகளை நினைவுபடுத்தச் செய்யும் போட்டி. நடிகர்கள், பாடகர்கள் என நாங்கள் எல்லோரும் அறிந்த பிரபலங்களின் தமிழறிவைச் சோதிக்கும் நிகழ்ச்சி'. ஆனால் உண்மையில் அவரும், போட்டியாளரும் சேர்ந்துகொண்டு தமிழைச் சோதிக்கிறார்கள். எப்பொழுதாவது ஆங்கில உரையாடலிலிருந்து பாவமாக எட்டிப்பார்க்கிறது தமிழ். உதாரணத்துக்கு மேலே நான் சுட்டியிருக்கும் உரையாடலின் வரிகளைப் பார்க்கலாம்.//

ஒரு நிகழ்ச்சி, தமிழ் மொழியை வளர்க்கும் நிகழ்ச்சி எனச் சொல்லிக் கொண்டு தமிழை இரண்டாம்பட்சமாக உச்சரிப்பதைச் சாடியே இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன்.

உதாரணத்துக்கு நீங்கள் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவராக இருந்து, இது சைவ ஹோட்டல் என்று விளம்பரப்படுத்தியிருக்கும் ஒரு ஹோட்டலுக்குப் போய் பசியோடு காத்திருக்கையில் உங்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டால் எவ்வாறு அதனைக் கோபத்தோடு எதிர்கொள்வீர்களோ அதே போன்றதொரு கோபத்தோடுதான் இதனை எழுதியிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை விஜய் டீவி ஆங்கிலத்திலேயே நடத்தலாம். ஆனால் அதற்கு 'தமிழை வாழ வைக்கும் நிகழ்ச்சி' என விளம்பரப்'படுத்தி'யிருக்கக் கூடாது. தமிழுக்காக, தமிழில் ஒரு நிகழ்ச்சி எனச் சொல்லிவிட்டு இந்தளவு ஆங்கிலத்தைத் திணித்து ஏன் தமிழின் கழுத்தை நெரிக்கவேண்டும்?

சானலை மாற்றுவது பிரச்சினையில்லைதான். எனது வீட்டுக் கதவின் வாயிலாகப் பார்க்கையில் ஒருவரை அநீதமாக அடிப்பதைப் பார்க்கிறேன். ஜன்னலின் வாயிலாகப் பார்க்கையில் பூஞ்சோலை தெரிகிறது. நான் அநீதத்தை எதிர்த்து எனது உணர்வினை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஏன் அப்படி வெளிப்படுத்தினாய், ஜன்னலின் வழியாகப் பேசாமல் பூஞ்சோலையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே எனக் கேட்டீர்களானால் என்ன சொல்வது?

என் மனதுக்கு அநீதமெனத் தோன்றுவது எதுவாக இருப்பினும் உடனே அதற்கெதிரான உணர்வினை வெளிப்படுத்துவது எனது இயல்பு. கோபமோ துயரமோ எனது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த விடயத்தில் எனக்கு எழுத்துத்தான் உதவுகிறது. தமிழ் மொழிக்கான நிகழ்ச்சி எனச் சொல்லிக் கொண்டு சர்வசாதாரணமாக இங்கு ஆங்கிலம் உபயோகிக்கப்படுவது எனக்கு அநீதமாகப் படுகிறது. அதனால் இங்கு எழுத்தை உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவ்வளவே !

என் எழுத்தொன்றினால் மட்டும் இந்த அநீதங்கள் சீர்பெறப் போவதில்லைதான். ஆனாலும் இந்த அநீதத்துக்காக ஏதோ ஒரு வகையில் குரல் கொடுத்திருக்கிறேன் என்ற நிம்மதியொன்றே எனக்குப் போதும்.
இன்னும் இதுபோன்ற அநீதங்களைக் காண நேரின் எழுதத்தான் செய்வேன் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Admin said...

நல்ல பதிவு. நன்றிகள் நண்பரே. இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே தமிழை கொலை செய்கின்றனர். ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்றுதான் புரியல்ல. எல்லை தமிழை விற்று பிழைப்பு நடத்துகிறார்களோ தெரியாது.

நாம் அவர்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள்.

தமிழை வளர்க்கும் ஒரு சிலரால்தான் இன்று தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

ம்ம் அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு தான் இது. உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.

இந்திய தொலைக்காட்சிகள் மட்டுமல்ல இன்று எம் நாட்டிலும் இதே தங்கிலீஸ் மோகம் பரவி விட்டது. அதனையாவது ஏற்றுக்கொள்ளலாம் என்றால் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலேயே சிலருக்கு கௌரவ குறைச்சல்.

தமிழுக்கு தமிழனே முதல் எதிரி
நம் சந்ததியினரிடையே தமிழ் பற்றை தூவி மனங்களை தூசி தட்ட அடிக்கடி இப்படியான பதிவுகள் தேவைப்படுகின்றன.

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் வளர்க்கும் பணி அருமையான பதிவு

Unknown said...

பதிவை வாசித்து வந்த கோபத்தை விட சில பின்னூட்டங்களை வாசித்து வந்த கோபங்கள் தான் அதிகம்...

இவர்கள் எல்லாம் இருக்கும் வரை 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று சொன்ன பேதை எனக்கு மேதையாகத் தெரிகிறான்....

வாழ்க தமிழரும், அவர் தம் மொழிப் பற்றும்...

அருமையான கட்டுரை... பாராட்டி பின்னூட்டமிடலாம் என்று பார்த்தால் தமிழர்களின் மொழிப்பற்றைக் கண்டு பெருமையடைந்து விடைபெறுகிறேன்...

M.Rishan Shareef said...

அன்பின் சந்ரு,

//நல்ல பதிவு. நன்றிகள் நண்பரே. இன்று தமிழை வளர்க்கவேண்டியவர்களே தமிழை கொலை செய்கின்றனர். ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்றுதான் புரியல்ல. எல்லை தமிழை விற்று பிழைப்பு நடத்துகிறார்களோ தெரியாது.

நாம் அவர்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள்.//

நீங்கள் சொல்வது சரிதான்.
உருப்படியாக இருந்த இலங்கைத் தொலைக்காட்சிகளிலும் இன்று தமிழ்க் கொலைகளைக் காணக் கூடியதாக இருக்கிறது. :(

//தமிழை வளர்க்கும் ஒரு சிலரால்தான் இன்று தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.//

நிச்சயமாக நண்பரே !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சம்யுக்தா கீர்த்தி,

//ம்ம் அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு தான் இது. உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.

இந்திய தொலைக்காட்சிகள் மட்டுமல்ல இன்று எம் நாட்டிலும் இதே தங்கிலீஸ் மோகம் பரவி விட்டது. அதனையாவது ஏற்றுக்கொள்ளலாம் என்றால் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலேயே சிலருக்கு கௌரவ குறைச்சல்.

தமிழுக்கு தமிழனே முதல் எதிரி
நம் சந்ததியினரிடையே தமிழ் பற்றை தூவி மனங்களை தூசி தட்ட அடிக்கடி இப்படியான பதிவுகள் தேவைப்படுகின்றன.

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் வளர்க்கும் பணி அருமையான பதிவு//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கனககோபி,

//பதிவை வாசித்து வந்த கோபத்தை விட சில பின்னூட்டங்களை வாசித்து வந்த கோபங்கள் தான் அதிகம்...

இவர்கள் எல்லாம் இருக்கும் வரை 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று சொன்ன பேதை எனக்கு மேதையாகத் தெரிகிறான்....

வாழ்க தமிழரும், அவர் தம் மொழிப் பற்றும்...

அருமையான கட்டுரை... பாராட்டி பின்னூட்டமிடலாம் என்று பார்த்தால் தமிழர்களின் மொழிப்பற்றைக் கண்டு பெருமையடைந்து விடைபெறுகிறேன்...//

சில பின்னூட்டங்கள் கோபத்தைக் கிளறிவிடுகின்றன தான்.. பதிவு அவர்களைச் சுட்டதால்தானே இந்தப் பின்னூட்டங்களென எண்ணி மகிழ்வதைத் தவிர வேறுவழியில்லை அல்லவா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Aren said...

நல்ல பதிவு. நானும் நினைப்பேன், ஏன் இப்படி தமிழ் தொலைகாட்சிகளில் ஆங்கில வார்த்தைகளை அநியாயமாக உபயோகிக்கிறார்களே என்று. இதற்குக் காரணம் அவர்கள் சென்னையிலிருந்து வந்ததால் இருக்கலாம். சென்னையில் ஆங்கில வார்த்தைகளைக் கலக்காமல் தமிழில் மட்டும் பேசினால், இவனுக்கு ஏதோ ஆகிவிட்டது மச்சி என்று ஒரு பைத்தியக்காரன் முத்திரை குத்திவிடுவார்கள். அப்படி ஆங்கில சென்னையை படுத்துகிறது. என்ன செய்வது. இப்பொழுது இருக்கும் நிலையில் ஆங்கிலம் தெரியாமல் சென்னையில் வேலைக்கு செல்லவே முடியாது என்ற நிலமை.

காலம் மாறவேண்டும், தமிழ் வளரவேண்டும்.

இளசு said...

///நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'///


-- இந்த வரி போதும்... கொடுமையின் உச்சம் சொல்ல!

பகிர்தலுக்கு நன்றி ரிஷான்..

அமரன் said...

ஆங்கிலம் பேசுவது தவறிலை.

நாகரிக மோகத்தில் தகைமை என எண்ணிப் பேசுவது...?
நாக ரிதம் நீங்கள் கொண்டதில் தவறில்லை ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் Aren,

நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் இந் நிலை மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் இளசு,

//நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'


-- இந்த வரி போதும்... கொடுமையின் உச்சம் சொல்ல!

பகிர்தலுக்கு நன்றி ரிஷான்.. //

:)
இதுபோலத்தான் அனேக நிகழ்ச்சிகளில் அவதானிக்கிறேன்.
அசைவம் சாப்பிட்டுக்கொண்டே சைவத்துக்கு பிரச்சாரம் செய்வது போல இவர்களது நடவடிக்கைகள். :)

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,

//ஆங்கிலம் பேசுவது தவறிலை.

நாகரிக மோகத்தில் தகைமை என எண்ணிப் பேசுவது...?
நாக ரிதம் நீங்கள் கொண்டதில் தவறில்லை ரிஷான் //

இச் சொல்லாடலை மிகவும் ரசித்தேன் :)

கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

MANO.G said...

நான் அண்மையில் தமிழ் நாட்டில்
விஜயம் செய்த பொழுது, நாங்கள் பேசிய தமிழை
கேட்ட தமிழ்நாட்டுகாரர் ஒருவர் நீங்கள் வெளி நாட்டினரா என கேட்டு நீங்கள் சுத்தமான தமிழில் உறையாடுகிரீர்கள் என்று சொன்னது கேட்டு, தமிழ் பிறந்த மண்ணில் தமிழ் படும் பாட்டை கேட்டு தமிழிக்கு
இந்த கதியா என மனம் வேதனை யோடு நாடு திரும்பினேன்.

வேந்தன் அரசு said...

என்னுடைய கருத்து இடம் பெறாமல் இந்த இழை முடியலாமா?

எனக்கு என்ன தோணுது என்றால், நிகழ்ச்சியின் உரிமையாள‌ர்கள்தான் இந்த கலப்படத்துக்கு பொறுப்பு

நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் வழக்க‌மாக வரும் சில்பா மேனன கவிதைதமிழில் பேசுவார். வழக்க‌மாக கலப்ப‌ட தமிழில் பேசும் ரம்யா ஒரு வாரம் நம்மவீட்டு கல்யாணத்தில் நல்ல தமிழில் பேசினார்.

சூபபர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு வாரமே கலந்து கொண்ட படவா கோபி கூட கலப்பில் பேசினார் எனறால் அவருக்கு உரையாடல் எழுதி கொடுத்தவர் செய்யும் கொடுமைதான்

எனவே அனுராதா மேல் தவறு இருக்காது.

குணமதி said...

***********************************
விஜய் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஒன்று செய்யலாம். இந்த 'பாட்டுப் பாட வா' நிகழ்ச்சியின் ஒரு வாரப் பரிசுத் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு, நல்ல தமிழை மட்டுமே பேசி நிகழ்ச்சியைத் தொகுக்கக்கூடிய ஒரு தொகுப்பாளரைத் தேடிப்பிடியுங்கள். அல்லது இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகள் கூடாதென்று விதிமுறையைச் சொல்லிவிடுங்கள். தமிழ் வாழும். அது தானாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. தயவுசெய்து இப்படிக் கொன்று விடாதீர்கள்.
***********************************
அருமையான வரிகள்!

கவனிப்பார்களா?

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் மனோ.G,

/நான் அண்மையில் தமிழ் நாட்டில்
விஜயம் செய்த பொழுது, நாங்கள் பேசிய தமிழை
கேட்ட தமிழ்நாட்டுகாரர் ஒருவர் நீங்கள் வெளி நாட்டினரா என கேட்டு நீங்கள் சுத்தமான தமிழில் உறையாடுகிரீர்கள் என்று சொன்னது கேட்டு, தமிழ் பிறந்த மண்ணில் தமிழ் படும் பாட்டை கேட்டு தமிழிக்கு
இந்த கதியா என மனம் வேதனை யோடு நாடு திரும்பினேன்//

ஆமாம். இதையேதான் பல இலங்கை நண்பர்களும் சொல்கிறார்கள். சென்னையில் நடமாடுகையில் தமிழில் பேசினால் வினோதமாகப் பார்க்கிறார்களாம். :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் குணமதி,

//அருமையான வரிகள்!

கவனிப்பார்களா? //

சொல்வது நமது கடமை. ஆனால் எதிர்பார்க்க முடியாது. :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் வேந்தன் அரசு,


//என்னுடைய கருத்து இடம் பெறாமல் இந்த இழை முடியலாமா?

எனக்கு என்ன தோணுது என்றால், நிகழ்ச்சியின் உரிமையாள‌ர்கள்தான் இந்த கலப்படத்துக்கு பொறுப்பு//

நிச்சயமாக !

//நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் வழக்க‌மாக வரும் சில்பா மேனன கவிதைதமிழில் பேசுவார். வழக்க‌மாக கலப்ப‌ட தமிழில் பேசும் ரம்யா ஒரு வாரம் நம்மவீட்டு கல்யாணத்தில் நல்ல தமிழில் பேசினார்.

சூபபர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு வாரமே கலந்து கொண்ட படவா கோபி கூட கலப்பில் பேசினார் எனறால் அவருக்கு உரையாடல் எழுதி கொடுத்தவர் செய்யும் கொடுமைதான்

எனவே அனுராதா மேல் தவறு இருக்காது.//


பாட்டுப் பாடவா நிகழ்ச்சியில் பாடகி அனுராதாவின் தவறு பல இடங்களில் அப்பட்டமாகிறது. மொழியில் மட்டுமல்ல. அண்மையில் ஒரு பார்வையற்ற பாடகி இப் போட்டியில் கலந்துகொண்டார். பானுப்ரியா ஹிட்ஸ் பாடலைத் தேர்ந்தெடுத்தவரை, ராதா ஹிட்ஸ் பாடலைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி வற்புருத்தித் தோற்கடிக்கச் செய்தார் பாடகி அனுராதா. :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

நாரதர் said...

அன்பர் ஷெரீபுக்கு!

உங்கள் கவலை நியாயமானதுதான். என்றாலும் இலங்கைத்திருநாட்டினிலே ஏராளமான தமிழ் நிகழ்ச்சிகள் ஓலிபரப்பாகி வருகின்றதே அவற்றை நீங்கள் பார்க்கலாமே? அவற்றைப்பற்றி கவலைப்படலாமே? அந்த நிகழ்ச்சிகள் மேம்பட தங்களது விமர்சனங்களை வைக்கலாமே? அதை விடுத்து தமிழக நிகழ்ச்சிகள் பால் உங்கள் விமர்சனங்களை வைப்பதானது மகா சமுத்திரத்துக்கு ஒரு சிறு கல்லை எறிவதற்கு சமம்.

அங்கிருப்பவர்களுக்கு அவ்வாறு பேசினால்தான் புரியுமோ என்னவோ??

மக்கள் தொலைக்காட்சியில் "தமிழ் பேசு தங்கக்காசு" என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது அது ரேட்டிங்கில் என்ன இடம் பிடித்திருக்கின்றது "பாட்டுப்பாடவா" என்ன இடம் பிடித்திருக்கின்றது என்பதை நீங்கள் பார்த்தால் அவர்கள் ஏன் இப்படி நிகழ்ச்சி நடத்துகின்றார்கள் என்பது புரியும்.....

தொலைக்காட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயழுங்கள். நல்ல நிகழ்ச்சிகளைப்பற்றி கொஞ்சமாவது பேசி அவற்றை "ரேட்டிங்கில்" இடம்பெறச்செய்யுங்கள்

M.Rishan Shareef said...

அன்பின் நாரதருக்கு,

//அன்பர் ஷெரீபுக்கு!

உங்கள் கவலை நியாயமானதுதான். என்றாலும் இலங்கைத்திருநாட்டினிலே ஏராளமான தமிழ் நிகழ்ச்சிகள் ஓளிபரப்பாகி வருகின்றதே //

ஆமாம். இந்திய நிகழ்ச்சிகளைப் பிரதிபண்ணாத பல நிகழ்ச்சிகள் இலங்கையில் நல்ல தமிழில்தான் வந்துகொண்டிருக்கின்றன.

//* அவற்றை நீங்கள் பார்க்கலாமே?//
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

//* அவற்றைப்பற்றி கவலைப்படலாமே?
* அந்த நிகழ்ச்சிகள் மேம்பட தங்களது விமர்சனங்களை வைக்கலாமே?//

நல்ல தமிழில் அவை வந்துகொண்டிருக்கும்போது எதற்கு அவை குறித்து கவலைப்படவேண்டும்?


//அதை விடுத்து தமிழக நிகழ்ச்சிகள் பால் உங்கள் விமர்சனங்களை வைப்பதானது மகா சமுத்திரத்துக்கு ஒரு சிறு கல்லை எறிவதற்கு சமம்.//

ஒரு நச்சு மரத்தின் வேருக்கு விஷமூற்றினால்தான், கிளைகளும் இறந்துவிடும்.
நான் எறியும் சிறு கல், ஒரு சிறிய சலனத்தை ஏற்படுத்தினாலும் எனக்குப் போதும். இப்பொழுது உங்களில் ஏற்பட்டிருப்பதைப் போல :)

//அங்கிருப்பவர்களுக்கு அவ்வாறு பேசினால்தான் புரியுமோ என்னவோ??

மக்கள் தொலைக்காட்சியில் "தமிழ் பேசு தங்கக்காசு" என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது அது ரேட்டிங்கில் என்ன இடம் பிடித்திருக்கின்றது "பாட்டுப்பாடவா" என்ன இடம் பிடித்திருக்கின்றது என்பதை நீங்கள் பார்த்தால் அவர்கள் ஏன் இப்படி நிகழ்ச்சி நடத்துகின்றார்கள் என்பது புரியும்.....//

மொழியைப் பற்றிப் பேசினால், ரேட்டிங்கைப் பற்றி விவரிக்கிறீர்கள். அவர்களது ரேட்டிங் எவ்வாறானால் எனக்கென்ன? எதற்கு மொழியைச் சீரழிக்க வேண்டும்?

//தொலைக்காட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயழுங்கள். //

அதைத்தான் இங்கு செய்திருக்கிறேன்.

//நல்ல நிகழ்ச்சிகளைப்பற்றி கொஞ்சமாவது பேசி அவற்றை "ரேட்டிங்கில்" இடம்பெறச்செய்யுங்கள்//

நல்ல நிகழ்ச்சிகளுக்கு, விளம்பரம் தேவையில்லை நண்பரே.
அவை தானாகவே 'ரேட்டிங்'கில் இடம் பெற்றுவிடும்.

நீங்கள் உங்கள் Status Message இல் குறிப்பிட்டிருக்கும் "தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்" என்பதைத் தான் நான் இங்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும், பாடகி அனுராதா ஸ்ரீராமுக்கும், கலந்துகொள்ளும் பாடகர்களுக்கும் சொல்லியிருக்கிறேன். அவ்வளவே !

கருத்துக்கு நன்றி நண்பரே !

Anonymous said...

//Good luck உங்களுடைய future projects எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். புதுப்பாடல்கள் release ஆகப்போகுது. We will pray that will be the big hit '//


//நம்மட தமிழ் பாஷையை மதிச்சு நம்மதான் இங்க வந்து அதுக்கு ஒரு மரியாதை கொடுத்து we have to prove that we are from தாய் தமிழ்நாடு'//



இந்த மாதிரி தமிழை கொலை பண்றவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும்!

இப்படியே போய்கிட்டு இருந்துச்சுன்னா தமிழ் சிக்கிரமா அழிந்திடும் அபாயம் உள்ளது :(

எஸ் சக்திவேல் said...

இன்றைக்குத்தான் இதை வாசிக்கிறேன். எனக்கும் இதே பார்வைதான். என்னால் 2 நிமிடங்கள் கூட இந்தமாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கமுடிவதில்லை.