Tuesday, September 1, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !


        அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

        மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
' நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?'
'ஆமாம். ஆவேன். கண்டிப்பாக'
'அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?'
'ஆவேன்' எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

        இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. 'இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?' எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, 'அழாதே' என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. 'அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது' என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

        இன்னும் இரட்டைக்குழந்தைகள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பாட வருகின்றனர். முதல் குழந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் இரட்டையர்கள் என்பது நடுவருக்கு பின்னர்தான் புரிகிறது. இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படக் கூடாது என இறுதியில் இருவரையுமே தேர்வு செய்துவிடுகிறார் நடுவர்.

        தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என் நேரத்தைத் திருடுவது குறைவு. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளின், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் விரும்பிப் பார்ப்பேன். அப்படித்தான் நேற்று விஜய் டீவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' போட்டிக்கான தேர்வு நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதிலிருந்த சில அபத்தக் காட்சிகள் சில தான் நான் மேற்சொன்னவை.

        தேர்வு நடக்கும் முன்பு தொகுப்பாளினி ஒரு வண்டியில், குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கே போய் அவர்களை அழைத்துக் கொண்டு எல்லோருடனும் வெகு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார். அது விஜய் தொலைக்காட்சியின் விளம்பர யுக்தியாக இருக்கும். எனினும் போட்டிக்காக உற்சாகத்துடன் கூக்குரலிட்டபடியும், பாடியபடியும் தொகுப்பாளினியுடன் வரும் குழந்தைகள் அப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி வாடிப்போவார்களென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணரவேயில்லையா? வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து அழைத்துப் போகும்போது இருக்கும் மகிழ்ச்சி, தேர்வில் தோற்றுத் தனது பெற்றோருடன் திரும்பத் தனியே வரும்போது கண்ணீராக மாறியிருக்கும்.

        போட்டித்தேர்வில் தோற்று அழுத அந்தப் பெண்குழந்தைக்கு அருகில் போய் முகத்தை சமீபமாக பதிவு செய்து உலகம் முழுக்கக் காட்டியாயிற்று. இந்தச் சாதாரண தோல்வியையே தாங்கிக் கொள்ளமுடியாத குழந்தை , நாளை அதன் வகுப்பறையில் 'டீவியில் அழுதவள்' எனக் கேலி, கிண்டலுக்காளாக்கப்படும்போது எந்தளவுக்கு மனம் உடைந்து போகும்? இன்னும் அந்தத் தாங்கமுடியாத வடு அதன் மனதில் முழு வாழ்நாளுக்கும் நீடித்திருக்கும். தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் ஒளிந்திருக்கும். இன்னும் ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ள முனையும்போது ஒரு பெரும் சுவர் போல இந்த வடு கண்முன்னே வந்து நிற்கும். எதற்காக அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன? அவசியமென்ன?

        'இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்' என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

        போட்டிகள் நடத்தலாம். சிறுவர்களை ஊக்குவிக்க அவை அவசியம்தான். ஆனால் அதன் வயதெல்லையை பத்திலிருந்து பதினான்கு என்பது போல அதிகரித்திருக்கலாம். தற்பொழுது பத்தாம் வகுப்புத் தேர்வையே மாணவர்களுக்குச் சுமையெனக் கருதி, அது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது இது போன்ற போட்டிகள் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு அவசியமா? இந்தப் போட்டிக்கான வயதெல்லை ஆறு முதல் பதினான்கு என்கிறார்கள். பத்துவயதுக்குக் குறைந்த பல குழந்தைகளுக்கு 'போட்டி ஏன்? எதற்காக நடத்தப்படுகிறது? இதில் வென்றால் என்ன பரிசு கிடைக்கும்?' போன்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லக் கூடத் தெரிந்திருக்காது. பெற்றோரின் தூண்டுதலால் ஒரு விளையாட்டுக்குச் செல்வதைப் போல பாடவந்திருக்கக் கூடும். முதல் தோல்வி முற்றும் தோல்வியல்ல எனப் பக்குவமாக உணரும் பருவம், சின்னஞ் சிறு குழந்தைகளுக்கானதல்ல. பிரபலமான முதல் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

        குழந்தைகள் எப்பொழுதும் தேடல்மிக்கவர்கள். தங்களது ஒவ்வொரு கணப்பொழுதிலும் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டவர்கள் அவர்கள். அக் கணங்களில் மனதில் பதிபவற்றைக் கொண்டே அவர்களது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. குழந்தைகளை வேலைக்கமர்த்திப் பணம் சம்பாதிப்பது எப்படிக் குற்றமோ, அது போலவே தானே அவர்களை வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதுவும்? குழந்தைகள் வெகு இயல்பாக 'வாடா மாப்பிளே.. வாழப்பழத் தோப்புல..வாலிபால் ஆடலாமா' எனப் பாடுவதுவும், உங்கள் விளம்பர யுத்திகளும், குழந்தைகளுக்கான அபத்தப் போட்டிகளும் உங்கள் பணப்பெட்டியை நிரப்பக் கூடும். எனினும் குழந்தைகளின் வாழ்வின் வேரில் விஷத்தினைப் பாய்ச்சுவதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்நன்றி - உயிர்மை

63 comments:

Prabu M said...

I was also thinking to write on these kind of TV programmes in your same point of view.....

Vazhi mozhigiren....

ஜோசப் பால்ராஜ் said...

அந்த விஜய் டிவியில எந்த ரியாலிட்டி ஷோவையும் அழுகாச்சி இல்லாம நடத்தக் கூடாதுன்னு ஏதும் விதிமுறை வைச்சிருப்பாய்ங்களோன்னு சந்தேகமா இருக்குங்க.

அழுகிறத க்ளோசப்ல காட்டி என்னத்த சாதிக்கப் போறானுங்கன்னு தெரியல. இந்த ஷோன்னு இல்ல. எல்லா ஷோவுலயும் அப்டித்தான்.
இதுல உச்சம், நடுவரா வந்திருந்த சிம்பு அழுது அடிச்ச காமெடி இருக்கே.
நல்ல கான்செப்ட் ஆனா இவனுங்க எடுக்குற விதம் இருக்கே, மிகக் கேவலம்.

கார்த்திக் பிரபு said...

Now they ve stared Anu alavum bayamillai ...yamma sami mudiyala anu konjam puthisali nu ninachadhu thappa pochu

Unknown said...

சரியா சொன்னிங்க சார். குழந்தைகளை வச்சி புரோக்ராம் நடத்தும்போது பாத்து செய்யணும். அந்தப் பொண்ணோட தன்னம்பிக்கையையே சிதைச்சிருப்பாங்க. Are you smarter than a fifth grader? மாதிரி ஒரு நிகழ்ச்சி குடுத்தா நல்லா இருக்கும்.

M.Rishan Shareef said...

அன்பின் பிரபு. எம்,

//I was also thinking to write on these kind of TV programmes in your same point of view.....

Vazhi mozhigiren....//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஜோசப் பால்ராஜ்,

//அந்த விஜய் டிவியில எந்த ரியாலிட்டி ஷோவையும் அழுகாச்சி இல்லாம நடத்தக் கூடாதுன்னு ஏதும் விதிமுறை வைச்சிருப்பாய்ங்களோன்னு சந்தேகமா இருக்குங்க.

அழுகிறத க்ளோசப்ல காட்டி என்னத்த சாதிக்கப் போறானுங்கன்னு தெரியல. இந்த ஷோன்னு இல்ல. எல்லா ஷோவுலயும் அப்டித்தான்.
இதுல உச்சம், நடுவரா வந்திருந்த சிம்பு அழுது அடிச்ச காமெடி இருக்கே.
நல்ல கான்செப்ட் ஆனா இவனுங்க எடுக்குற விதம் இருக்கே, மிகக் கேவலம்.//

ஆமாம் நண்பரே..
சிம்புவைத் தொடர்ந்து அணுவளவும் பயமில்லையில் சான்ட்ரா, ஆர்த்தின்னு அழுகைக் காட்சிகள் தொடருது. ஒரு கட்டத்தில் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்களே இப்படிச் செய்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக் பிரபு,

//Now they ve stared Anu alavum bayamillai ...yamma sami mudiyala anu konjam puthisali nu ninachadhu thappa pochu//

:)
அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சி தேவையற்ற ஒன்று என்றே எனக்கும் தோன்றுகிறது. பிரபலமானவர்களின் தைரியத்தை நிரூபிப்பதில் பார்வையாளர்களுக்கு பயனென்ன இருக்கிறது? இவர்களை விடவும் தைரியம் வாய்ந்த பெண்கள் பொதுமக்களில் இருக்கிறார்கள்.

அத்தோடு இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து எத்தனை குழந்தைகள் செய்துபார்க்க முயன்று சிரமப்படப் போகிறார்களோ? :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் முகிலன்,

//சரியா சொன்னிங்க சார். குழந்தைகளை வச்சி புரோக்ராம் நடத்தும்போது பாத்து செய்யணும். அந்தப் பொண்ணோட தன்னம்பிக்கையையே சிதைச்சிருப்பாங்க. Are you smarter than a fifth grader? மாதிரி ஒரு நிகழ்ச்சி குடுத்தா நல்லா இருக்கும்.//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல தரப்பட்ட பார்வையாளர்களுக்கும் போகிறது. எனவே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இது குறித்து பலவாறு சிந்திக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

யோகியார் said...

அப்பாடா! நான் ரொம்ப நாளா சொல்ல ஏங்கியதை மிக அழகுற இவண் சொன்னீர்கள். வாழ்க!

சங்கர் குமார் said...

மாறாக வெற்றியும் தோல்வியும் வாழ்வில் சகஜம் என்பதை இந்த இளவயதிலேயெ இவர்களுக்கு உணர்த்தி, வருங்காலத்திற்கு ஒரு பண்படுத்தும் பாதையை அமைத்துத்தர வசதி செய்து தருவதாகவெ நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.
கேலி செய்யும் மாணவியரிடம், 'நான் டிவியில் வந்தேன். நீ அதுகூட இல்லை. பேசாமப்போ' எனச் சொல்லும் துணிவையும் இது ஊட்டும் என நம்புகிறேன்.
காய்த்த மரம்தான் கல்லடி படுமாம். ரஜினி இதற்கொரு உதாரணம்! இப்போது இந்த நிகழ்ச்சியும்!
ஒரு தரமான நிகழ்ச்சியை ஏதோ ஒரு நிறுவனம் வெற்றிகரமாகத் தொடர்ந்து வழங்கி வந்தால் பொறுக்காதே.
எல்லாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது நண்பரே!

வேந்தன் அரசு said...

நான் மிகவும் ரசிக்கும் நிகழ்ச்சி

விஜி said...

// மாறாக வெற்றியும் தோல்வியும் வாழ்வில் சகஜம் என்பதை இந்த இளவயதிலேயெ இவர்களுக்கு உணர்த்தி, வருங்காலத்திற்கு ஒரு பண்படுத்தும் பாதையை அமைத்துத்தர வசதி செய்து தருவதாகவெ நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.
கேலி செய்யும் மாணவியரிடம், 'நான் டிவியில் வந்தேன். நீ அதுகூட இல்லை. பேசாமப்போ' எனச் சொல்லும் துணிவையும் இது ஊட்டும் என நம்புகிறேன்.
காய்த்த மரம்தான் கல்லடி படுமாம். ரஜினி இதற்கொரு உதாரணம்! இப்போது இந்த நிகழ்ச்சியும்!
ஒரு தரமான நிகழ்ச்சியை ஏதோ ஒரு நிறுவனம் வெற்றிகரமாகத் தொடர்ந்து வழங்கி வந்தால் பொறுக்காதே.
எல்லாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது நண்பரே! //


தொடக்கத்தில் எனக்கும் ரிஷான் மாதிரியே எண்ண வைத்தது ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சி எத்தனை திறமையான சிறுவர்களை முன்னுக்கு கொண்டு வந்திருக்கின்றது என்னும் போது....நீங்கள் சொல்வதோடு உடன் படுகின்றேன் அண்ணா.

ஓம் வெ.சுப்பிரமணியன் said...

ஓம்.
விளம்பரம். ஊடகங்கள் நன்மைசெய்வதாகச் சொல்லி தீமையான சூழலைப் படம்பிடித்துக் காட்டி இள நெஞ்சங்களை, பக்குவம் அடையாத பிஞ்சுகளை நோகச்செய்து மேதா விலாசத்தை நிலைநாட்டுகின்றன.

எதிர்பார்த்ததற்கு மேலேயும் பாடும் குழந்தகள் உள்ளன. அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்களே!. அதற்காக பந்தியில் பாடிக் கொஞ்ச நேரத்தில் பிடித்துத் தள்ளினாற்போல உள்ளது.

அபத்தக் களஞ்சியம். குரல் கொடுக்கவேண்டும்.தக்க மாற்றங்கள் செய்யவேண்டும்.

நடராஜன் - கல்பட்டு said...

இப்படிப் போட்டி என்று வைக்காமல் வந்திருந்த குழந்தைகள் அனைவருக்குமே பரிசளித்து சிறப்பித்திருக்கலாமே என்று தான் எனக்கும் தோன்றும். டீ. வீ. சேனல்கள் தங்களது அறிவுக் குறைவால் சின்னஞ் சிறிசுகளின் மனத்தில் ஆறாத காயம் உண்டாக்குவது மிகப் பெரிய தவறு.

தமிழன் வேணு said...

இது போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளிடம் இருக்கிற திறமை வெளிப்படுகிறது என்பது என்னவோ உண்மை தான். ஆனால், வெற்றி தோல்வி சகஜம் என்ற மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பதால், பல குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றன. வியாபாரத்துக்காக இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிற தொலைக்காட்சிகளை விடவும், 'இது வெறும் போட்டி, இதன் வெற்றி தோல்வியின் அடிப்படையில் உன் வாழ்க்கை அடங்கியிருக்கவில்லை," என்று புரிய வைக்காத பெற்றோர்களே அதிகம் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். இவர்களே இப்படி இருந்தால், குழந்தைகள் எப்படி உருப்படும்?

மதி அழகன் said...

அதெல்லாம் சரி. நிகழ்ச்சியின் மையக்கரு எது? பாடுவதுதானே? அதை மட்டும் காட்டினால் போதுமே! அதற்குப்பிறகு அழுவதையெல்லாம் காண்பிப்பது மக்களை ஒரு சீரியஸ்நெஸ்க்கு உட்படுத்த. ஏதோ தமிழ் மண்ணிற்கு பெரிய அற்பணிப்பு ஒன்றைத் தந்துகொண்டிருப்பதாக காண்பிக்க! எல்லாவற்றிலும் காசு பார்க்கிற கயவாணிப்பயல்கள்!

நரேஷ் குமார் said...

என் மனதில் தோன்றிய அதே எண்ணத்தை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்!!! முழுக்க உடன்படுகிறேன்…

ஆரம்பத்தில் இதை விரும்பி பார்த்த எனக்கு, தொடர்ந்து திற்மையை விட, உணர்ச்சி வயப்படுதலையோ அல்லது அழுவதையோ அல்லது பெற்றோர்கள் ரொம்ப ஃபீல் பண்ணுவதையோ அதிகப் படுத்தி காட்டும் போதுதான் எரிச்சலாகி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்…

இந்த நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சி என்பதிலோ, பல திறமையாளர்களையோ அடையாளங் காட்டுகிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை…ஆனால் இது போன்ற விஷயங்கள், நிகழ்ச்சியையும் அதன் தரத்தையும் புறந்தள்ளிவிடுவதுதான் வேதனை…

நஜீபா அக்தர் said...

குழந்தைகளின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்ள இயலாமல், தமது உடனடிப் புகழ் தேடுகிற அரிப்பைத் தீர்த்துக் கொள்ள சில பெற்றோர்கள் மேற்கொள்ளுகிற அறிவீனமான செயல். இதன் விளைவுகள் நாளாவட்டத்திலேயே புரியும்.

தண்டபாணி said...

இதன் தாக்கம் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களிலும் தென்படத் துவங்கியிருப்பது கலக்கம் அளிக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்னாள், எனது நண்பரது குழந்தை படிக்கும் பள்ளி ஆண்டு விழாவில் ஐந்தாவது வகுப்புப் படிக்கிற குழந்தைகள் "Loose Control" என்ற ஹிந்திப் பாடலுக்கு ஆடியதை எண்ணினால் வேதனையாக இருக்கிறது.

பிரேம்குமார் said...

// 'இது வெறும் போட்டி, இதன் வெற்றி தோல்வியின் அடிப்படையில் உன் வாழ்க்கை அடங்கியிருக்கவில்லை," என்று புரிய வைக்காத பெற்றோர்களே அதிகம் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். இவர்களே இப்படி இருந்தால், குழந்தைகள் எப்படி உருப்படும்? //

அருமையா சொன்னீங்க வேணு அய்யா....இதே தான் என் கருத்தும். ஒரு சின்ன பாட்டு போட்டிக்கே இப்படி அசந்துட்டா அப்புறம வாழ்க்கை எனும் பெரும் போட்டியை இவுங்க எப்படி எதிர் கொள்வாங்க?

விசாலம் ராமன் said...

பங்கு பெறும் எல்லா குழந்தைகளுக்குமே அவர்கள் பாடியதைப்பாராட்டி எதாவது
சிறு பரிசு கொடுக்கும் வழக்கம்
இருந்தால் குழந்தை திருப்தியுடன் போய்விடும் சிறு பரிசு ஆனாலும்
அவர்களின் மனதில் ஒரு திருப்தி ஏற்படும் ஸ்பானசர் செய்யவும் பலர்
விளம்பரத்திற்காக முன் வருவார்கள் அதன் பின்
தேர்வு செய்யலாம் அப்போது இத்தனைத் தாக்கம் இருக்காது

ஜெய் said...

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரியவர்களுக்கே

இல்லை

சிறு குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்

புலவர்.அசோக் said...

பெரியவர்களுக்குத் தான் இல்லை.

தோல்வியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நேரடியா அல்லது மறைமுகமா பிறந்ததில் இருந்து குழந்தை மனதில் பதித்தது யார்?

குழந்தைகளுக்கு தன் தோல்வியை விட அதிகம் பாதிப்பது அந்த தோல்வியை தன் பெற்றோர் எடுத்துக் கொள்ளும் விதம் தான்.

M.Rishan Shareef said...

அன்பின் யோகியார்,

//அப்பாடா! நான் ரொம்ப நாளா சொல்ல ஏங்கியதை மிக அழகுற இவண் சொன்னீர்கள். வாழ்க!
யோகியார்//


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சங்கர்குமார்,


//மாறாக வெற்றியும் தோல்வியும் வாழ்வில் சகஜம் என்பதை இந்த இளவயதிலேயெ இவர்களுக்கு உணர்த்தி, வருங்காலத்திற்கு ஒரு பண்படுத்தும் பாதையை அமைத்துத்தர வசதி செய்து தருவதாகவெ நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். //


நீங்கள் பார்ப்பது வேறு. குழந்தைகளின் பார்வை வேறு நண்பரே.
'பூனைக்கு விளையாட்டு; சுண்டெலிக்கு சீவன் போகிறது' என்பதனைப் போல நாம் நமது பொழுதுபோக்குக்காக இந் நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கலாம். சம்பந்தப்பட்ட குழந்தைகளின் மனம் பசுமரத்தாணி போன்றது. அதில் தோன்றும் வடுக்கள் காலாகாலத்துக்கும் அழியாதது.

//கேலி செய்யும் மாணவியரிடம், 'நான் டிவியில் வந்தேன். நீ அதுகூட இல்லை. பேசாமப்போ' எனச் சொல்லும் துணிவையும் இது ஊட்டும் என நம்புகிறேன்.//


எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படி எதிர்த்துப் பதிலளிக்கும் திறமை இருப்பதில்லை.

//காய்த்த மரம்தான் கல்லடி படுமாம். ரஜினி இதற்கொரு உதாரணம்! இப்போது இந்த நிகழ்ச்சியும்!
ஒரு தரமான நிகழ்ச்சியை ஏதோ ஒரு நிறுவனம் வெற்றிகரமாகத் தொடர்ந்து வழங்கி வந்தால் பொறுக்காதே.
எல்லாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது நண்பரே!//


அந்த நிறுவனம் வெற்றிகரமாகவோ, தோல்விகரமாகவோ நிகழ்ச்சியை வழங்கினால் எனக்கென்ன? அவர்கள் குழந்தைகளையும் அவர்களது உணர்ச்சிகளையும் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். அதைத்தான் கூடாதென்கிறேன்.


'இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்' என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

விஜய் டீவி இந் நிகழ்ச்சியில் மேடைக்குப் பின்புலத்தில் உள்ளவற்றை முக்கியமாக குழந்தைகளின் அழுகையை காட்சிப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? அதைத் தெளிவாக ஸ்லோமோஷனில் காட்டி, பிண்ணனிக்குரலொன்று அதனை வர்ணித்து....இவ்வாறான விவரிப்புக்கள், காட்சிப் படுத்தல்கள் எல்லாமே அதன் வியாபாரத் தந்திரமன்றி வேறென்ன? அதைத்தான் சாடியிருக்கிறேன்.


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேந்தன் அரசு,

//நான் மிகவும் ரசிக்கும் நிகழ்ச்சி//


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//
மாறாக வெற்றியும் தோல்வியும் வாழ்வில் சகஜம் என்பதை இந்த இளவயதிலேயெ இவர்களுக்கு உணர்த்தி, வருங்காலத்திற்கு ஒரு பண்படுத்தும் பாதையை அமைத்துத்தர வசதி செய்து தருவதாகவெ நான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.
கேலி செய்யும் மாணவியரிடம், 'நான் டிவியில் வந்தேன். நீ அதுகூட இல்லை. பேசாமப்போ' எனச் சொல்லும் துணிவையும் இது ஊட்டும் என நம்புகிறேன்.
காய்த்த மரம்தான் கல்லடி படுமாம். ரஜினி இதற்கொரு உதாரணம்! இப்போது இந்த நிகழ்ச்சியும்!
ஒரு தரமான நிகழ்ச்சியை ஏதோ ஒரு நிறுவனம் வெற்றிகரமாகத் தொடர்ந்து வழங்கி வந்தால் பொறுக்காதே.
எல்லாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது நண்பரே!


<<<<<<<<<<<<<<<<<<<<<<


தொடக்கத்தில் எனக்கும் ரிஷான் மாதிரியே எண்ண வைத்தது ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சி எத்தனை திறமையான சிறுவர்களை முன்னுக்கு கொண்டு வந்திருக்கின்றது என்னும் போது....நீங்கள் சொல்வதோடு உடன் படுகின்றேன் அண்ணா.//


திறமையான சிறுவர்களை முன்னுக்குக் கொண்டு வருவதுதான் இந் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமென்றால், தங்கள் திறமையை வெளிக்காட்டத் தயங்கிய, தவறிய குழந்தைகளின் அழுகைகளை வர்ணனைகளோடு காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? அவற்றை நீக்கிவிட்டு, குழந்தைகள் சிறப்பாகப் பாடுவதை மட்டும் காட்டினால் போதுமே? இம் மாதிரியான நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் முக்கிய நோக்கம் இந் நிகழ்ச்சிகளை பார்வையாளர்களிடத்தில் முண்ணனிக்குக் கொண்டுவருவதே தவிர திறமையான சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவருவதல்ல.

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் சோழியான்,

//சங்கர் ஐயா கூறுவது உண்மை. டென்னிஸ் உலகில் ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட யேர்மனிய வீரர் பொறிஸ் பெக்கர் மிக இளவயதிலேயே விம்பிள்டன் கோப்பையைச் சுவீகரித்தவர். அவர் தோல்வி அடையும்போது , மைதானத்திலேயே அழுவது சாதாரணமான நிகழ்வாக இருந்தது.


எப்போது அவர் அழுகையை நீறுத்தினாரோ, அப்போதிலிருந்தே டென்னிஸ் உலகில் அவரது இறங்குமுகம் ஆரம்பமாகிவிட்டது.

எனவே, தோல்வியைக் கண்டு அழும் குழுந்தைதான் வெற்றிக்காக முயற்சிக்கிறது. :)) //


எல்லாக் குழந்தைகளையும் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது. சிறிய பரீட்சைத் தோல்விகளுக்கே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போகும் குழந்தைகளை நாம் சக காலத்தில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் இன்னும்.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் வெ.சுப்பிரமணியன்,


//விளம்பரம். ஊடகங்கள் நன்மைசெய்வதாகச் சொல்லி தீமையான சூழலைப் படம்பிடித்துக் காட்டி இள நெஞ்சங்களை, பக்குவம் அடையாத பிஞ்சுகளை நோகச்செய்து மேதா விலாசத்தை நிலைநாட்டுகின்றன.//


ஆமாம். இதைத்தான் நான் அபத்தமெனச் சொல்லியிருக்கிறேன். நிறுவனத்துக்கு பணத்தேவை மற்றும் பிரபலத்தேவை. அதற்கு குழந்தைகள் பலிகடாக்கள்.


//எதிர்பார்த்ததற்கு மேலேயும் பாடும் குழந்தகள் உள்ளன. அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்களே!. அதற்காக பந்தியில் பாடிக் கொஞ்ச நேரத்தில் பிடித்துத் தள்ளினாற்போல உள்ளது.

அபத்தக் களஞ்சியம். குரல் கொடுக்கவேண்டும்.தக்க மாற்றங்கள் செய்யவேண்டும்.//


மிகச் சரியான கருத்து.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நடராஜன் ஐயா,

//இப்படிப் போட்டி என்று வைக்காமல் வந்திருந்த குழந்தைகள் அனைவருக்குமே பரிசளித்து சிறப்பித்திருக்கலாமே என்று தான் எனக்கும் தோன்றும். டீ. வீ. சேனல்கள் தங்களது அறிவுக் குறைவால் சின்னஞ் சிறிசுகளின் மனத்தில் ஆறாத காயம் உண்டாக்குவது மிகப் பெரிய தவறு.//


டீ.வி. சேனல்களின் அறிவுக்குறைவால் அல்ல. மிகப் பெரிய புத்திசாலித்தனத்தோடு குழந்தைகளின் மனங்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேணு,

//இது போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளிடம் இருக்கிற திறமை வெளிப்படுகிறது என்பது என்னவோ உண்மை தான். ஆனால், வெற்றி தோல்வி சகஜம் என்ற மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பதால், பல குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றன. //


மிகவும் சரி.


//வியாபாரத்துக்காக இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிற தொலைக்காட்சிகளை விடவும், 'இது வெறும் போட்டி, இதன் வெற்றி தோல்வியின் அடிப்படையில் உன் வாழ்க்கை அடங்கியிருக்கவில்லை," என்று புரிய வைக்காத பெற்றோர்களே அதிகம் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். இவர்களே இப்படி இருந்தால், குழந்தைகள் எப்படி உருப்படும்? //


குழந்தைகளிடத்தில் எதிர்பார்ப்பைத் தூண்டுவதில் பெற்றோரின் பங்கு அதிகம்தான். பிறகு ஏமாற்றமடையும்போது குழந்தையின் மனநிலையிலிருந்து சிந்திக்கத் தவறிவிடுகின்றனர் எல்லோரும்.


கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மதியழகன்,


//அதெல்லாம் சரி. நிகழ்ச்சியின் மையக்கரு எது? பாடுவதுதானே? அதை மட்டும் காட்டினால் போதுமே! அதற்குப்பிறகு அழுவதையெல்லாம் காண்பிப்பது மக்களை ஒரு சீரியஸ்நெஸ்க்கு உட்படுத்த. ஏதோ தமிழ் மண்ணிற்கு பெரிய அற்பணிப்பு ஒன்றைத் தந்துகொண்டிருப்பதாக காண்பிக்க! எல்லாவற்றிலும் காசு பார்க்கிற கயவாணிப்பயல்கள்!//


ஆமாம்.. அது ஒரு வியாபாரத் தந்திரமும் கூட. வெறுமனே குழந்தைகள் பாடும் நிகழ்ச்சியென்றால் அது வழமையான நிகழ்ச்சியாகிவிடுமென்று போட்டியாளர்களை அழவைத்து , அவர்களது உணர்ச்சிகளோடு விளையாடி, அதனைக் காட்சிப்படுத்தி பணம் பார்க்கிறார்கள். :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நரேஷ் குமார்,

//என் மனதில் தோன்றிய அதே எண்ணத்தை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரிஷான்!!! முழுக்க உடன்படுகிறேன்…

ஆரம்பத்தில் இதை விரும்பி பார்த்த எனக்கு, தொடர்ந்து திற்மையை விட, உணர்ச்சி வயப்படுதலையோ அல்லது அழுவதையோ அல்லது பெற்றோர்கள் ரொம்ப ஃபீல் பண்ணுவதையோ அதிகப் படுத்தி காட்டும் போதுதான் எரிச்சலாகி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்…

இந்த நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சி என்பதிலோ, பல திறமையாளர்களையோ அடையாளங் காட்டுகிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை…ஆனால் இது போன்ற விஷயங்கள், நிகழ்ச்சியையும் அதன் தரத்தையும் புறந்தள்ளிவிடுவதுதான் வேதனை…//


ஆமாம் நண்பரே.
இது போன்ற அபத்தங்களைத் தவிர்த்தால் இது நல்ல நிகழ்ச்சிதான். ஆனால் தவிர்க்க மாட்டார்கள். ஏனெனில் இந்த அபத்தங்களினால்தான் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது அவர்களுக்கு.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நஜீபா அக்தர்,

//குழந்தைகளின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்ள இயலாமல், தமது உடனடிப் புகழ் தேடுகிற அரிப்பைத் தீர்த்துக் கொள்ள சில பெற்றோர்கள் மேற்கொள்ளுகிற அறிவீனமான செயல். இதன் விளைவுகள் நாளாவட்டத்திலேயே புரியும்.//


ஆமாம்.
பெற்றோர்களின் ஆவலும் ஆசையும் பல குழந்தைகளின் திறமைகளை மேலும் வளரவிடாமல் செய்துவிடுகின்றன; அவர்களுக்கே தெரியாமல் !

கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் தண்டபாணி,

//இதன் தாக்கம் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களிலும் தென்படத் துவங்கியிருப்பது கலக்கம் அளிக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன்னாள், எனது நண்பரது குழந்தை படிக்கும் பள்ளி ஆண்டு விழாவில் ஐந்தாவது வகுப்புப் படிக்கிற குழந்தைகள் "Loose Control" என்ற ஹிந்திப் பாடலுக்கு ஆடியதை எண்ணினால் வேதனையாக இருக்கிறது. //


இது இப்பொழுது சகஜமாக ஆகிவிட்டிருக்கிறது. அண்மையில் ஒரு சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள நேரிட்டது. பாரதியார் பாடலைத் தெரியாதெனச் சொன்ன குழந்தை மன்மத ராசாவைப் பாடியது. :(

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பிரேம்குமார்,


// 'இது வெறும் போட்டி, இதன் வெற்றி தோல்வியின் அடிப்படையில் உன் வாழ்க்கை அடங்கியிருக்கவில்லை," என்று புரிய வைக்காத பெற்றோர்களே அதிகம் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். இவர்களே இப்படி இருந்தால், குழந்தைகள் எப்படி உருப்படும்? //

அருமையா சொன்னீங்க வேணு அய்யா....இதே தான் என் கருத்தும். ஒரு சின்ன பாட்டு போட்டிக்கே இப்படி அசந்துட்டா அப்புறம வாழ்க்கை எனும் பெரும் போட்டியை இவுங்க எப்படி எதிர் கொள்வாங்க?//


சரியான கருத்து.
நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விசாலம் அம்மா,

//பங்கு பெறும் எல்லா குழந்தைகளுக்குமே அவர்கள் பாடியதைப்பாராட்டி எதாவது
சிறு பரிசு கொடுக்கும் வழக்கம்
இருந்தால் குழந்தை திருப்தியுடன் போய்விடும் சிறு பரிசு ஆனாலும்
அவர்களின் மனதில் ஒரு திருப்தி ஏற்படும் ஸ்பானசர் செய்யவும் பலர்
விளம்பரத்திற்காக முன் வருவார்கள் அதன் பின்
தேர்வு செய்யலாம் அப்போது இத்தனைத் தாக்கம் இருக்காது//


மிகச் சரி அம்மா. ஆனால் அந்தச் சிறு பரிசை வழங்கவும் தயங்குகிறார்கள். :(
கருத்துக்கு நன்றி அம்மா !

M.Rishan Shareef said...

அன்பின் ஜெய்,

//தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரியவர்களுக்கே

இல்லை

சிறு குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் //


அதைத்தான் நானும் சொல்லவருகிறேன். சரி. தோற்றுவிட்டார்கள். அப்படியே விட்டுவிடலாம்தானே. அதையே திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்தி இன்னும் அக் குழந்தைகளின் மனம் சலிக்கச் செய்வதன் அவசியம் என்ன?

கருத்துக்கு நன்றி நண்பரே !

Aren said...

ஆமாம் நானும் நேரம் கிடைக்கும் நாட்களில் இந்த ப்ரோக்ராமை பார்க்கிறேன். சிறிய குழந்தைகள் என்னமாதிரி பாடுகிறார்கள். அதிலும் ச்ரிகாந்த் என்ற பையன் என்ன அருமையாக சுருதி குறையாமல் பாடுகிறான்.

கண்மணி said...

சிறுவயதில் தோல்வியே காணாதவர்கள் வளர்ந்த பின் தோல்விகளை ஜீரணிக்க முடியாமல் தற்கொலை முடிவு எடுப்பவர்களாக மாறுகிறார்கள். இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறது.

அதற்காக போட்டியிடும் வயதை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை...

அழுகையைக் காட்சிப் படுத்தி காசு பார்ப்பது தவறுதான்,

அதுவே அந்தக் குழந்தையைத் தேற்றி.. அடுத்த கட்டத்திற்கு செல்லாவிட்டாலும் இத்தனை நாள் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு சின்ன நினைவுப் பரிசை கொடுத்து நிமிர்ந்த நடையுடன் வருவதைக் காட்டினால்...

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்பதற்கு உதாரணமாய் இருக்குமல்லவா!!!

யோசிக்க வேண்டிய கோணம்தான்...

நேசம் said...

சில மழலைகளின் திறமை கண்டு களித்தாலும், இந்த கட்ட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்து எனக்கு வந்து இருக்கிறது.குழந்தைகள் நிகழ்ச்சிகள் மட்டுமில்லை அனைத்து பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு பின்னால்
நடப்பதை படம் பிடித்து காட்டுவது அவர்களின் யுக்தியாக இருக்கிறது

அய்யா said...

நடத்துவோரும் பிறரும் இல்லையென்று சொன்னாலும், இந்நிகழ்ச்சி, பங்கேற்கும் குழந்தைகளுக்கிடையே ஒரு ஒப்பீடாகத்தான் தோற்றமளிக்கிறது.

வளரும் பருவத்தில் நிகழும் இதுபோன்ற பெரும் எதிர்பார்ப்பும், விளம்பரமும் கொண்ட ஒப்பீடுகள், பிஞ்சுமனங்களைப் பாதிக்கச் செய்யவல்லவை.

திறமையைப் பளிச்சிடச் செய்வது நல்ல விடயமே.. ஆனால் திறமையாளருக்கான அங்கீகாரம் எண்ணற்ற இளம் மனங்களை மிதித்து மேடை போட்டு வழங்கப்படலாகாது.

போட்டியாளர்களது பெற்றோரின் ஈடுபாடும், எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக உள்ளது.அவர்கள் ஆரம்பச் சுற்று வெற்றிகளில் கொண்டாட்டமிடுவதும், தோல்வியில் சுருள்வதும் பிஞ்சு மனங்களில் அழத்தத்தை அதிகரித்து பாதிக்கச் செய்யும்.

நான் பயின்ற பள்ளியில், குழந்தைகளுக்கான போட்டிகளில், பங்கேற்றவர் எல்லோருக்கும் பரிசு உண்டு.

அறிஞர் said...

அருமையான கருத்தை தெரிவித்து இருக்கிறீர்கள்.

சமீபத்தில் என்னுடைய நண்பனின் 6 வயது மகன்... ஒரு கேள்வி தவறாக சொல்லிவிட்டானாம். அதற்காக அழுது ரகளை செய்துவிட்டான்.. தோல்வியை தாங்கிக்கொள்ள மனப்பக்குவம் இல்லாதிருந்தது.

பெற்றோர் அவர்களை சரியாக வழிநடத்தும்பொழுது.. அதை அவர்கள் சரியாக எடுத்துக்கொளவர்.

வீட்டில் விளையாடினாலும் சில நேரம் அவர்களுக்கு வெற்றி கொடுக்க வேண்டும். சில நேரம் தோற்கடிக்கவேண்டும்.. அது அவர்களுக்கு நல்ல பலனை தரும்.
------------
டிவியில் பொதுவில் காட்டுவது சிலருக்கு வில்லங்கமாக மாறும். டிவியில் நான் வந்தேனே.. அதுவே போதும் என்ற நிலையை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டும்.

வானதி தேவி said...

நன்றாக கூறினீர்கள் ரிஷான்.பல முறை நானும் ஆதங்கபட்டிருக்கிறேன்.ஆறுதல் பரிசு கொடுக்கலாம்.இல்லை என்றால் தனியாக பெற்றோரிடதத்தில் அறிவிக்கலாம்.

இளசு said...

ஊடகங்களுக்கு ஒரு நல்ல வினா..

ரிஷானின் பதிவெழுப்பும் கேள்விக்கு
கண்மணி, அறிஞர் பதிவுகளில் பதில் இருக்கிறது..


பாராட்டுகள் அலசிய அனைவருக்கும்..

கா.ரமேஷ் said...

தோல்வியை விளம்பரத்திற்காக வெளிச்சம் போட்டு காட்டுவதை தவிர்க்க வேண்டும், தோல்வியை நாசூக்காக கூற வேண்டும்...

மற்றபடி இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தேவை எனத்தான் படுகிறது.என்னதான் குழந்தைகளுக்கு சுமைகள் என நாம் நினைத்தாலும் அவர்கள் சந்தோசமாகவே பாடுகிறார்கள் தங்களது திறமைக்கு கிடைத்த வாய்ப்பாகவே பயன்படுத்துகிறார்கள் ,என்ன தோல்வி என வரும்போது கொஞ்சம் மனம் உடைந்து போகிறார்கள் ஊடகமும் கொஞ்சம் பெரிது படுத்தி காண்பிக்கிறது.மற்றபடி சிறு வயதிலேயெ புத்தக மூட்டையை சுமக்க செய்து ஆங்கில கல்வியை படிக்க சொல்லும் நம் மக்கள் தனி திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில் தவறொன்றும் இல்லை...

இவற்றை குழந்தைகள் பயன் படுத்தும் முறைகளை பொறுத்து இருக்கின்றது,பெற்றோர்களின் வழிகாட்டுதலை பொறுத்து இருக்கிறது...

உண்மையிலே அனைத்து குழந்தைகளும் அருமையாக பாடுகிறார்கள் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று இது...

பால்ராஜ் said...

முதலாவது இந்த மின்னணு ஊடகங்களைக் கட்டுப் படுத்த ஏதாவது செய்ய வேண்டும்..

கோடிக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு என்னனவோ செயல் படுகிறார்கள்...

இங்கு 5 அல்லது 10 லட்சம் கொடுக்கும்போது 50 அல்லது 100 லட்சம் கொடுக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வழக்கம்...

ஆனால் எல்லாமே "ஸெட் அப்" என்ற தோன்றுதல் அடிக்கடி அடி மனதில் தோன்றி மறைவது வழக்கம்....

பெற்றோர்கள் கொஞ்சம் பொறுப்புடன் இருப்பது வெகு அவசியம்...

அன்பு ரசிகன் said...

நிகழ்ச்சி தவறல்ல. திரைக்குப்பின்னால் நிகழ்வதை முன்னால் கொண்டுவருகிறார்கள். அதற்கு சோக இசையும் கலந்து... அந்த பிஞ்சு மழலைகள் பாடசாலை போகும் போது யாராவது ஒரு வசனம் நளினமாக பேசினாலும் அந்த பிஞ்சு வெம்பிவிடும் என்று நினைக்க மறுக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

வெற்றி வாசன் said...

இதை இரு கோணத்தில் பார்க்கலாம். இந்த காலத்தில் சிறுவர்களுக்கு நிறிய வாய்ப்புகள் உள்ளது.
பொட்டி என்று வந்தால் வெற்றி தோல்வி என இரண்டும் தன வரும். தோல்வியில் துவளும் குழ்ந்தைகளை காட்டி (emotional selling) பணம் பண்ணும் தந்திரம் விஜய் டிவி கு கை வந்த கலை. இது எல்லா ரியலட்டி ஷோ க்கும் பொருந்தும்.
ஆகவீ இந்த சிறு குறையை பெரிது படுத்தாமல், குழைந்தைகள் எப்படி நன்றாக படுகிறார்கள் என்று ரசித்தல் ஒரு மணி நேரம் நன்றாக செலவுஇடலாம் .

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள் Aren, கண்மணி, நேசம், அய்யா, அறிஞர், வானதி தேவி, இளசு, கா.ரமேஷ், பால்ராஜ், அன்பு ரசிகன், வெற்றி வாசன்,

அருமையான கருத்துக்கள் பலவற்றையும் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
மிகவும் நன்றி அன்பு நண்பர்களே !

மன்மதன் said...

நாம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி இது.

திரைக்கு பின்னால் நடப்பதை சிறுவர் விஷயத்திலேயாவது விட்டு வைக்கலாம்.

நல்ல அலசல் ..பாராட்டுகள் ரிஷான்.

Aren said...

ஆனால் இந்த சிறுவர் நிகழ்ச்சி போரடிக்குதுமாதிரி தெரிகிறதே.

25 லட்சம் ரொக்கப்பணம் என்று நினைத்தேன், இப்பொழுதுதான் தெரிந்தது அவர்கள் ஊருக்கு வெளியே எங்கேயோ ஒரு வீட்டைக் குடுக்கிறார்கள் என்று.

எனிவே, ஏதாவது கொடுக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டியதுதான்

M.Rishan Shareef said...

அன்பின் மன்மதன், Aren,

கருத்துக்கு நன்றி நண்பர்களே !

பால்ராஜ் said...

அந்த சின்னப் பையன் ஸ்ரீகாந்த் என்று நினைக்கிறேன்.. நன்றாகத் தான் பாடுகிறான்.. நல்ல திறமை. பெற்றோர்களின் கோச்சிங் எல்லாம் அசத்தல். ஆனால் வயதுக்கு அதிமீறிய வெயிட்டேஜ் தரப்படுகிறது..

மோசமாகப் பாடும்போது கூட ஸ்பாட் செலக் ஷன் கொடுத்து விடுகிறார்கள்.

போட்டி என்று வரும்போது இவைகளைத் தவிர்ப்பது நல்லது.. ஒரே சீராக தீர்ப்பு சொல்வதே நடு நிலைமையை நிலை நாட்டுவது சிறப்பாக இருக்கும்.

விராடன் said...

தோற்றுப் போன குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் குறைப்பதும் தாழ்வு மனப்பாங்கை உருவாக்குவதுமே குறிக்கோளாக இருக்கும் :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள் பால்ராஜ், விராடன்,
கருத்துக்கு நன்றி நண்பர்களே !

பால்ராஜ் said...

எல்லோரும் விரும்பும் ஒரு நிகழ்ச்சி சிறுவர்களின் திறமையை பாட்டு பாடுவதின் மூலமாக ஆராயும் ஒரு திரை பதிவு. யாரும் குறை சொல்ல முடியாதபடி நன்றாக பாடுகிறார்கள். சமீப காலமாக திறமையை சோதிக்கும் நீதிபதிகள் ஒரு தலை பட்சமாக இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இதனால் நல்ல சிறுவர்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இதை பார்த்தவர்கள் உணருவார்கள்.வேறு ஒரு புதிய திரியில் பதிக்கப் பட்ட கருத்து..
ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம்.. நீதிபதிகள் வேலை சற்று சிரமமானது.. ஒரு சிலரை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது..
பாரபட்சம் ... ஒவ்வொருவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது..
எங்குதான் இல்லை...!!!

பால்ராஜ் said...

மொழி வாரியாகப் பிரிக்கப் படுகிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றாகத் தோன்றவில்லை..

விஜய் மட்டுமல்ல.. பல சானல்களிலும் பல நிகழ்சிகளையும் பார்ப்பதால் தோன்றும் ஒரு எண்ணம்..

பின்னணியில் பல "செட் அப்" கள் நடக்கின்றன.. ஸ்பான்ஸர்ஸ்.. நீதிபதிகள் என்று தோன்றும் கோமாளிகள்.. எல்லோருமே .. ரிமோட் கண்ட்ரோல்-களுக்கு அடிமைகள்..

சென்ற வாரம் அந்த 'குட்டி'ப்பையன் ஸ்ரீகாந்த்.. 1 லட்சம் கிடைத்த காட்சிகளைவிட வேறு ப்ரூஃப் வேண்டுமா என்ன... அதில் எத்தனை பாகம் கிக் பாக் என்பதே கேள்வி??

Aren said...

கிக் பாக் இருக்குமா என்பது சந்தேகமே. யாராவது இதை வெளியே சொல்லிவிட்டால் பிரச்சனையாகிவிடும், அதனாலே கிக் பாக் இருக்காது என்பதே என் கணிப்பு.

ஆனால் நடுவர்கள் ஒரு சிலரை தூக்கியும் ஒரு சிலரை மட்டும் தட்டவும் செய்கிறார்கள். ஒரு சிலர் நன்றாகப் பாடினாலும் அவர்களை அவ்வளவாக புகழ்வதில்லை, அதில் குறைகளையே கண்டுபிடிக்கிறார்கள்.

ரோஷன், அல்கா, பிரியங்கா, ஸ்ரவன், சஹானா ஆகியோர் மிகவும் திறமையாக பாடுகிறார்கள். இவர்களில் ஒருவருக்குத்தான் பரிசு கிடைக்கும் என்று நினைக்கிறேன். வேறு யாருக்காவது வந்தால், அது நீங்கள் சொல்வது போல் இருந்தால்தான் நடக்கும்.

பால்ராஜ் said...

எனக்கென்னவோ அந்த சிறுசுகளில் பெரிசு.. உயரமான பையன்.. அவனை ஃபிக்ஸ் பண்ணி விட்டார்கள் என்று உள்ளுணர்வு கூறுகிறது...

அல்கா .. ப்யூர் மெரிட் என்று சொன்னால் வெற்றி பெறவேண்டிய சிறுமி...!

ஆனால் ரியால்டி ஷோக்களீல்.. நடப்பது பலதும் போலி.. ஐபிஎல் போன்றதே...!

த.ஜார்ஜ் said...

சமீபத்தில் சில பாடல்கள் ஒலிபதிவிற்க்காக சென்னை சென்றிருந்தபோது நடுவர்களாக இருந்து அனுபவப்பட்ட பாடகர்கள் பகிர்ந்து கொண்ட விசயங்கள்,இம்மாதிரி நடக்கும் நிகழ்சிகளின் கறுப்பு பக்கங்கள் பற்றியதுதான்.ஒரு நிகழ்சியில் திறமை மிக்க ஒரு பாடகரை டைரக்டரின் உறவினருக்காக 'எலிமினெட்'செய்ய் வெண்டியிருந்ததைப் பற்றி ஒருவர் கவலை கொண்டிருந்தார்.இன்னொரு பாடகர் சொன்னார்: காலை பத்து மணிக்கு ஒளிப்பதிவு என்று அழைத்துவரப்பட்ட சிறுவன் இரவு பத்து மணியானபோதும் பதிவு நடைபெறவில்லை.தூங்கி விட்டான்.அவன் பெற்றோர் மெதுவாக தட்டி எழுப்ப,அவன் எழும்பாமல் போக், வ்ந்தது கோபம் ஓங்கி விட்டார் ஒரு அறை.துடித்து போய் அலறிக்கொண்டிந்தானாம் அந்த சிறுவன்.குழந்தை தொழிலளர் ஒழிப்பு சட்டத்தை நினைவு கூர்ந்தார் அந்த பாடகர்.பெற்றோரின் மீடியா வெறியை என்னென்பது. இன்னும் சில சானல்களில் முன்பே பாடி ஒலிப்பதிவு செஇத பாடலுக்கு வாயசைப்பு மட்டுமே நடக்கிறது என்ற தகவலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.உண்மையா என்பதை தக்ஸ் தான் சொல்லவேண்டும்.

மதி said...

எல்லாம் சரி.. இறுதிப்போட்டி நடந்து கொண்டிருக்கிறது.. ஐவரில் யார் அந்த ஒருவர்???

shammi's blog said...

A very true happening it has been always the modesty being testified and it goes even more worse now a days in the program of jodi no 1 juniors and here the comments goes even more ridiculous and when the judges talk about the kids .....KIDS ...the mention the chemistry is missing and they should correct it ...what a incorrigible thing is that to talk with a kid of 10 and 12 about the chemistry between them....and now the media's and the particular program persons are only worrying about selling their slots....just they should be aware what they are sowing into the kids mind, now to the contrary there comes a program in star plus called "Chote Ustad" in star plus , which is very good here a child from India and a child from Paksitan is being paired for singing its really nice to see the kids affection and how they mingle with each other., here i don want to give an indictment this one is nice and others aren't , now there is another competition to state who is the best mom , where we are edging to I really hesitate to say this but being rationale its the media which are curious to sell their slots not in improvising the kids....