
அவனுக்கென்றொரு பெயர் இருக்கிறது. ஆனால் அவனது வீட்டில், கிராமத்தில் எல்லோரும் சிறு வயதிலிருந்து 'சின்னவனே' என்றுதான் அவனை அழைக்கிறார்கள். பலகைகளால் ஆன குடிசையொன்றில் அவனும், அவனது விதவைத் தாயும், சகோதரியும் வசிக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத சிறுவன் அக் குடிசையின் பலகைச் சுவரில் கரிக் கட்டியால் மூன்று + அடையாளங்களை இட்டு, அவை தானும், அக்காவும், அம்மாவும்...