
காலத்தின் பெருந்துயர்களையும், வாழ்வின் நிகழ்வுகளையும், மன உணர்வுகளையும் சொற்களில் வடித்துக் கவிதைகள் எழுதப்படும் போது அவற்றினை வாசிக்கும் ஆவல் மிகுவதோடு, வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதிய கவிஞனின் வரிகளோடு புகுந்து சென்று அவனது உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலுமாக இருக்கிறது. இவ்வாறாக மன உணர்வுகளை மாற்றிச் செல்லக்கூடிய 'நிழல் தேடும் கால்களை' சமீபத்தில் கிடைக்கப்பெற்றேன். இத்...